உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




110

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 4 'இராச பண்டிதன்" என்றும் இவனது மெய்க்கீர்த்தி கூறுவதால் இவ்வுண்மையை நன்குணரலாம். முதல் இராசேந்திர சோழனாகிய கங்கைகொண்ட சோழன் 'பண்டித சோழன்' என்று வழங்கப் பெற்றனன் என்பது அறியற்பாலது. இவனை 'முத்தமிழுக்குந் தலைவன்' என்று மெய்க்கீர்த்தி உணர்த்துவதால் இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழிலும் இவன் வல்லவனாயிருந்திருத்தல் வேண்டும் என்பது ஒருதலை. இத்தகைய தமிழ்ப் புலமையை ஆசிரியர் ஒட்டக்கூத்தர்பால் கல்வி பயின்றே இவன் பெற்றிருத்தல் வேண்டும். இவன், தன் தந்தை பாட்டன் ஆகிய இருவர் காலத்தும் அவைக்களப் புலவராக நிலவிய ஒட்டக்கூத்தர், தன் காலத்தும்

ருந்து தனக்குத் தமிழாசிரியர் ஆயினமையைப் பெரும் பேறாகக் கருதி, அவர்க்கு வேண்டியன வெல்லாம் உதவி, அவர்பால் அளவற்ற அன்பும் மரியாதையும் உடையவனாய் ஒழுகி வந்தனன் என்று தெரிகிறது. இவன் வடமொழிப் பயிற்சி யாரிடம் பெற்றனன் என்பது பிறகு விளக்கப்பெறும். சமயநிலை

-

வன் தன் தந்தையைப்போல் தில்லைக் கூத்தப்பிரானிடம் எல்லையற்ற அன்புடையவன். இதனைத் தொல்லைத் திருமரபிற் கெல்லாந் தொழுகுலமாந் தில்லைத் திருநடனஞ் சிந்தித்து’ என்னுங் கூத்தர் வாக்கினால் நன்கறியலாம். இவன், தன் தந்தை, தில்லையம்பலமுன்றிலிலிருந்த திருமாலை அலைகடலில் கிடத்தியமைபற்றி வைணவர்கள் மனம் புண்பட்டிருத்தலை யுணர்ந்து தன் ஆட்சியில் அன்னோர்க்கு ஆதரவளித்து அவர்கள் உளங்குளிரச் செய்தனன். இதுபற்றியே, 'விழுந்த அரி சமயத்தையும் மீளவெடுத்'தனன் என்று இவன் மெய்க்கீர்த்தி கூறும். எனவே, இவன் சிறந்த சைவனாயினும் புறச் சமயங்களிடத்தில் வெறுப்பின்றிச் சமயப் பொறையுடை யவனாய்த் திகழ்ந்தனன் என்பது தெள்ளிது. போர் நிகழ்ச்சி

இவன் கல்வெட்டுக்களை நோக்குங்கால், இவனது ஆட்சிக் காலத்தில் போர்களே நிகழவில்லை என்று தெரிகிறது. ஆனால்,

1. முந்தைமுழு துலகுய்ய முடிசூடும் ராஜ பண்டிதன் (இராசராசன் மெய்க்கீர்த்தி) 2. இராசராச சோழ னுலா, வரிகள் 93 - 94.