உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 2

111

இவன் வஞ்சிமா நகரைத் தாக்கிச் சேரனை வென்று வாகை புனைந்தா னென்றும், மதுரைமேற் படையெடுத்துப் பாண்டியனை வென்றான் என்றும் தக்கயாகப் பரணி' கூறுகின்றது. அன்றியும், சேர நாட்டிற்குப் படைத்தலைமை வகித்துச் சென்று போர் புரிந்து வெற்றி யெய்தி நம் இராசராசனுக்கு வாகை சூட்டியவன், காரிகைக் குளத்தூருடையான் திருச்சிற்றம் பலமுடையான் பெருமான் நம்பியாகிய பல்லவராயன் என்பது தக்க யாகப் பரணியாலும், அவன் உரையாலும் நன்கறியக் கிடக்கின்றது.2 இவன் சேரனோடு நிகழ்த்திய இப்போர் இராசராச சோழனுலா விலும் சொல்லப்பட்டுள்ளது. இராசராசனுக்கு ஆண்டுதோறும் திறை செலுத்திவந்த சேரனும் பாண்டியனும் முரண்பட்டமை பற்றி அன்னோர்பால் திறை கொள்ள வேண்டி இப்போர்களை இவன் நிகழ்த்தியிருத்தல் வேண்டும் என்பது ஒருதலை. அதுபற்றியே, இவன் இவற்றைப் பெரும்போர்களாகக் கருதித் தன் மெய்க்கீர்த்தியில் குறிப்பிடவில்லை போலும்.

காவிரிக்கு வழி கண்டது

3

இவ் வேந்தன் ஆட்சிக் காலத்தில் மலையமலைப் பக்கத்தில் காவிரியாறு அடைப்புண்டு கிழக்கு நோக்கித் தண்ணீர் வாராமல் தடைப்படவே, சோணாட்டு வளம் சுருங்குவதாயிற்று. அதனை யறிந்த இராசராசன் அம்மலையை நடுவில் வெட்டுவித்துக் காவிரியாற்றிற்கு வழிகண்டு, சோழ நாட்டிற்கு என்றும் தண்ணீர் வந்து கொண்டிருக்குமாறு செய்தனன். இச் செய்தி,

1. இஞ்சியின் வல்லுரு மேறு கிடந்த

வஞ்சியின் வாகை புனைந்தவன் வாழியே.

(தக்கயாகப்பரணி,பா.800)

(மேற்படி, பா.803)

தென்னவர் தென்மது ராபுரிசீறிய

மன்னவர் மன்னன் வரோதையன் வாழியே

2 வில்லவனைத் திறைகொண்ட வேற்றண்ட காபதியை

பல்லவனைப் பாடாதார் பசியனைய பசியினமே.

(மேற்படி, பா.236)

3. இடப்புண்ட பேரிஞ்சி உதியர் வஞ்சியிலிட்ட

கடப்ப முதுமுரசங் காணீர்’. (இராசராச சோழ னுலா,

வரிகள் 172 -74)

இப்பாடலின் உரையில் உரையாசிரியர் எழுதியுள்ள வரலாற்றுக் குறிப்பினாலும் சேர நாட்டின் மேல் படையெடுத்துச் சென்றவனிவனே யாவன் என்பதை .நன்கறியலாம்.