உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 2

135

காலத்துக் கல்வெட்டுக்கள் கடப்பை ஜில்லாவிலுள்ள நந்தலூரிலும் நெல்லூர் ஜில்லாவிலும்’ திருக் காளத்தியிலும்’ காணப்படுகின்றன. ஆகவே, அப்பகுதிகள் இவனுக்குத் திறை செலுத்திக் கொண்டிருந்த சிற்றரசர்களால் ஆளப்பட்டு வந்தன வாதல் வேண்டும்.

இவனது இறுதிக் காலம்

5

வனது ஆட்சியின் பதினாறாம் ஆண்டுக் கல்வெட் டொன்று திருவதிகை வீரட்டானத்தில் உள்ளது." இவ் வாண்டிற்கு மேல் இவனுடைய கல்வெட்டுக்கள் தமிழ் நாட்டிற் காணப் படவில்லை. ஆனால் பதினாறாம் ஆண்டிற்கு மேற்பட்ட இவனுடைய கல்வெட்டுக்கள் ஆந்திர நாட்டில் திராட்சாராமம் முதலான ஊர்களில் காணப்படுகின்றன. இவனது பதினாறாம் ஆட்சி யாண்டிற்குப் பின் கி. பி. 1178-ல் மூன்றாங் குலோத்துங்க சோழன் சோழ நாட்டில் ஆட்சியுரிமையைக் கைக்கொண்டு அரியணை யேறினான் என்பது சில கல்வெட்டுக்களால் நன்கறியக் கிடக்கின்றது. இராசாதிராசனுக்கும் குலோத்துங் கனுக்கும் இடையே ஆட்சி யுரிமைப் பற்றி உள்நாட்டில் சிறிது குழப்பம் ஏற்பட்டிருத்தல் வேண்டுமென்பது தென்னார்க்காடு ஜில்லா திட்டக்குடியிலுள்ள கல்வெட்டொன்றால் குறிப்பாக உணரக் கிடக்கின்றது.° இக்குழப்பத்தினாலேயே இம் மன்னன் தமிழ்நாட்டை விட்டு ஆந்திர நாட்டையடைந்து தன் இறுதிக் காலத்தை அங்கேயே கழித்திருத்தல் வேண்டுமென்று தோன்று கிறது. இப்பொழுது கிடைத்துள்ள கல்வெட்டுக்களின் துணை கொண்டு இதுபற்றித் தெளிவாகத் தெரிந்து கொள்ள இயல வில்லை.

1. Ins. 571 of 1907.

2. Nellure Insciptions, N. 108.

3. Ins. 105 of 1922.

4. Ins. 389 of 1921.

5. Ep. Ind., Vol. IV, p. 266; Ibid., Vol. VIII, p. 264.

6. S.I.I., Vol. VIII, No. 284.