உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 2

181

சக்கரவர்த்தியின் உடன்பாடு பெறாமலே குறுநில மன்னர்கள் தமக்குள் ஒற்றுமை கருதி உடன்படிக்கை செய்து கொள்ளும் வழக்கம் பிற்காலத்தில் ஏற்பட்டு விட்டமை குறிப்பிடத்தக்கது. இவ்வழக்கம் சோழ இராச்சியம் நாளடைவில் பெருகிப் பேரரசர்க்கு அடங்காமல் தனியரசு புரிய வேண்டும் என்ற எண்ணத்தையும் விருப்பத்தையும் சிற்றரசர்கட்கு உண்டு பண்ணி விட்டது என்பது ஒருதலை. எனவே நம் குலோத்துங்கன் காலத்திற்குப் பிறகு சில குறுநில மன்னர்களும் தலைவர்களும் தமக்குட் பட்டிருந்த நிலப் பரப்பிற்கு தாமே யரசராகி எவருக்கும் அடங்காமல் தனியரசு நடத்தத் தொடங்கினர். இதனால்தான் கி.பி. பதிமூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் அழிவெய்தும் நிலையை அடைந்தது என்பது உணரற்பாலது.