உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




182

22. மூன்றாம் இராசராச சோழன் (கி.பி. 1216 -1256)

மூன்றாங் குலோத்துங்க சோழன் கி. பி. 1218ஆம் ஆண்டில் இறந்தவுடன், அதற்கு இரண்டாண்டுகட்கு முன் கி. பி. 1216ல் ளவரசுப் பட்டம் கட்டப்பெற்றிருந்த மூன்றாம் இராசராச சோழன் சோழ இராச்சியத்திற்குச் சக்ரவர்த்தியாக முடி சூட்டப் பெற்றான். இவன் மூன்றாங் குலோத்துங்க சோழனுடைய புதல்வன் என்று கூறுவதற்குத் தக்க ஆதாரங்கள் இதுகாறும் வெளிவந்துள்ள கல்வெட்டுக்களில் காணப்பட வில்லை. எனினும், இவன் அவ் வேந்தனுடைய மகன் என்பதில் சிறிதும் ஐயமில்லை. இச்செய்தி இனி வெளிவரும் கல்வெட்டுக் களால் உறுதியெய்துதல் கூடும்.

சோழ மன்னர்கள் ஒருவர்பின் ஒருவராக மாறி மாறிப் புனைந்துகொண்ட இராசகேசரி பரகேசரி என்ற பட்டங்களுள் இவன் இராசகேசரி என்னும் பட்டம் புனைந்து அரசாண்டவன் ஆவான். எனினும், சில கல்வெட்டுக்கள் இராசகேசரியைப் பரகேசரி என்றும் பரகேசரியை இராசகேசரி என்றும் இவன் காலத்தும் இவன் தந்தையின் காலத்தும் குறிப்பிடுகின்றன. அவையனைத்தும் கல்வெட்டுக்களைப் பொறிப்போரால் நேர்ந்த பிழைகளே எனலாம்.

2

இவ் வேந்தன் கல்வெட்டுக்களில் இரு மெய்க்கீர்த்திகள் காணப்படுகின்றன. அவற்றுள் ஒன்று, 'சீர்மன்னி இருநான்கு திசை விளங்கும்"என்று தொடங்குகின்றது. இதில் வரலாற்றுக் 1. Ep. Ind., Vol. VIII, p. 260.

2. இக்காலப் பகுதியில் ஒரே அரசனுக்கு இராசகேசரி பரகேசரி என்ற பட்டங்கள் இரண்டும் முறையின்றி வழங்கப்பட்டுள்ளன என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியிருப்பது அறியத் தக்கது. (The Colas, Vol. II, p. 174; Annual Report on South Indian Epigra- phy for 1908 - 09; part II, para 50.)

3.S.I.I.,Vol. IV, Nos. 424 and 540.