உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 2

183

குறிப்புக்கள் காணப்படாமையின் இஃது ஆராய்ச்சிக்குப் பயன்படுவதன்று. “சீர்மன்னு மலர்மகளும் சிறந்ததனி நிலைச் செல்வியும்” என்னும் தொடக்கத்தையுடையது. இது நீண்ட மெய்க்கீர்த்தியாயிருத்தலால் சோணாட்டுச் சிறப்பையும் இவனது குணம் ஆட்சி இவற்றின் பெருமையையும் இவனுடைய பட்டத்தரசியின் அருங்குணங்களையும் எடுத்துரைப்பதாக

உளது.

இராசராசன் ஆளுகையில் சோழ இராச்சியத்தின் நிலை

இவன் ஆட்சிக் காலத்தில் சோழ இராச்சியம் பல்வகைத் துன்பங்களுக்குள்ளாகித் தன் சீருஞ் சிறப்பும் இழந்தது. இவனுடைய முன்னோர்கள் தம் பேராற்றலால் உயர்நிலைக்குக் கொணர்ந்த சோழர் பேரரசை அதன் நிலை குன்றாதவாறு தாங்கிப் புரத்தற்குரிய ஆண்மையும் வீரமும் இவன்பால் இல்லாமற் போயினமையே அதன் வீழ்ச்சிக்கு முதற் காரணம் ஆகும். அன்றியும் சோழ இராச்சியத்திற்கு வடமேற்கே ஹொய் சளரும், தெற்கே பாண்டியரும் வல்லரசுகளாகித் தம் பேரரசை நிறுவுதற்குப் பெரிதும் முயன்று அம் முயற்சியில் ஓரளவு வெற்றியும் பெற்று வந்தனர். நம் இராசசாசன் காலத்தில் அவ்விரு பேரரசர்களும் ஒருவருக்கொருவர் முரண்பட்டு நின்றமையால்தான் நடுவிலிருந்த சோழ இராச்சியம் அவர்களால் கவர்ந்து கொள்ளப் பட்டு அவர்கள் இராச்சியங்களுக்குள் ஒடுங்கி மறைந்தொழி யாமல் ஒருவாறு நிலைபெற்றிருந்தது எனலாம். சோழ இராச் சியத்திற்கு வடகிழக்கே நெல்லூர்ப் பக்கத்தில் ஆட்சிபுரிந்து கொண்டிருந்த தெலுங்கச் சோழர்கள், தமக்கு வடக்கேயிருந்த காகதீயரை உற்ற நண்பராகவும் உறவினராகவுங் கொண்டு வலிமை எய்தி வந்தனர். இந்நிலையில், மகத நாட்டு வாண கோவரையர், திருமுனைப்பாடி நாட்டு காடவராயர் முதலான குறுநில மன்னர்கள் நம் இராச ராசனோடு பகைமை கொண்டு உள்நாட்டில் கலகமும் குழப்பமும் உண்டுபண்ணித் தாமே தனியரசு நடத்த முயன்றனர். எனவே, வலிகுன்றிய வேந்தன் ஒருவன் இத்துணை அல்லல்களையும் போக்கித் தன் இராச்சியத்தில் அமைதி நிலவச் செய்வது இயலாததொன்றாம்.

1. Ins. 392 off 1918; Ins 504 of 1918.