உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




184

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 4

ஆகவே, இவன் ஆட்சியில் பல்வகை இன்னல்களும் உணடாயின மையில் வியப்பொன்று மில்லை. பொதுவாக நோக்குமிடத்து, இவன் ஆளுகை நல்லோரையில் தொடங்கவில்லை என்பது தெள்ளிதிற் புலனாகும்.

மாறவர்மன் சுந்தர பாண்டியனது முதற்படையெழுச்சி

இராசராசன் இளவரசுப் பட்டம் பெற்ற ஆண்டாகிய கி.பி.1216-ல் முதல் மாறவர்மன் சுந்தர பாண்டியன் என்பான் பாண்டி நாட்டில் முடிசூட்டப் பெற்றனன். அவன் அறிவு ஆற்றல்களிற் சிறந்த பெருவீரன் ஆவான். பலஆண்டுகளாகத் தன் முன்னோர்களாகிய பாண்டி வேந்தர்கள் சோழர்க்கு அடங்கி அன்னோர்க்குத் திறை செலுத்தும் குறுநில மன்னராக வாழ்ந்து வந்ததையும் தன் இளமைப் பருவத்தில் மூன்றாம் குலோத்துங்கன் பாண்டி நாட்டின் மேல் படை யெடுத்து அங்குப் பலபல அழிவு வேலைகளை நிகழ்த்திச் சென்றதையும் அவன் மறந்தவனல்லன். ஆகவே, வாய்ப்பு நேருங்கால் சோழ நாட்டில் அத்தகைய செயல்களைச் செய்து தன் வெற்றிப் புகழை யாண்டும் பரப்ப வேண்டும் என்ற எண்ணம் அவனது இளம் உள்ளத்தில் வேரூன்றிக் கிடந்தது. அதற்கேற்ப, பேராற்றல் படைத்த பெரு வேந்தனாகிய மூன்றாங் குலோத்துங்கன் கி. பி. 1218ஆம் ஆண்டில் இறந்தான். பிறகு அறிவும் வன்மையும் குன்றிய அவன் புதல்வன் இராசராசன் சோணாட்டில் அரியணை ஏறினான். சோழ நாட்டின்மேல் படையெடுப்பதற்குத் தக்க காலத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த சுந்தர பாண்டியன், தன் கருத்தை நிறைவேற்றுவதற்கு அதுவே உரிய காலம் என்று கருதினான். எனவே, குலோத்துங்கன்இறந்த பின்னர், நம்

ராசாசன் முடிசூடிய சில திங்கள்களில் கி. பி. 1219 ஆம் ஆண்டின் முற்பகுதியில் சுந்தர பாண்டியன் பெரும் படையைத் திரட்டிக்கொண்டு சோழ மண்டலத்தின்மீது படையெடுத்து வந்து இச் சோழ மன்னனைப் போரில் வென்று நாட்டைக் கைப்பற்றிக் கொண்டான். இப்படையெழுச்சியில் சோழரின் பழைய தலைநகரங்களாகிய தஞ்சாவூரும் உறையூரும் பாண்டி நாட்டு வீரர்களால் கொளுத்தப்பட்டன; பல மாட மாளிகைகளும்

1. 'தஞ்சையு முறந்தையுஞ் செந்தழல் கொளுத்தி' என்று சுந்தர பாண்டியன் மெய்க்கீர்த்தி கூறுவது காண்க.