உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 2

185

கூடகோபுரங்களும் ஆடலரங்குகளும் மணி மண்டபங்களும் ம் இடிக்கப்பெற்றன. நீர் நிலைகள் அழிக்கப்பட்டன. சோழன் கரிகாற் பெருவளத்தான் என்பான் தன் மீது பட்டினப் பாலை பாடிய கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்ற புலவர்க்கு முற்காலத்தில் பரிசலாக வழங்கியிருந்த பதினாறுகால் மண்டபம் ஒன்றுதான் சோழ நாட்டில் இடிக்கப்படாமல் விடப்பெற்றது என்றும் பிற எல்லாம் அழிக்கப்பட்டு விட்டன என்றும் திருவெள்ளறையில் பாடலாகவுள்ள சுந்தர பாண்டியன் கல்வெட்டொன்று கூறுகின்றது. அதனால் அப் பாண்டி வேந்தன் தன் படையெடுப்பில் சோழ நாட்டில் எத்தகைய அழிவு வேலைகளைச் செய்திருத்தல் வேண்டும் என்பது நன்கு புலப்படுதல் காண்க. ஆகவே பல தலைமுறைகளாகச் சோணாட்டு மக்கள் தம் வாழ்நாளில் கண்டறியாத பல்வகைத் துன்பங்களுக்குள்ளாகுமாறு இம்முறைதான் நேர்ந்தது எனலாம்.

இனி இப் போர் நிகழ்ச்சியில் தோல்வியுற்ற இராசராசன், தன் உரிமைச் சுற்றத்தினருடன் தலைநகரை விட்டு நீங்கி, வேறிடஞ் சென்று கரந்துறையும் நிலையை எய்தினான். வாகை சூடிய சுந்தர பாண்டியன், அந்நாளில் சோழர்க்குத் தலைநகராக விளங்கிய முடிகொண்ட சோழபுரம் எனப்படும் பழையாறை நகர்க்குச் சென்று, அங்கு ஆயிரத்தளி அரண்மனையிலிருந்த சோழனது அபிடேக மண்டபத்தில் வீராபிடேகஞ் செய்து கொண்டான். பிறகு அவ்வேந்தன் தில்லையம்பதிக்குச் சென்று பொன்னம்பலவாணரை தரிசித்துவிட்டுப் பாண்டி நாட்டிற்குத் திரும்புவானாயினன். அங்ஙனம் சென்றவன் தன் நாட்டிலுள்ள நகரங்களுள் ஒன்றாகிய பொன்னமராவதியில் சில நாட்கள் வரையில் தங்கியிருந்த காலத்தில் நாட்டை இழந்த இராச

1. வெறியார் தளவத் தொடைச்செய மாறன் வெகுண்ட தொன்றும் அறியாத செம்பியன் காவிரி நாட்டி லரமியத்துப்

பறியாத தூணில்லை கண்ணன் செய் பட்டினப் பாலைக்கன்று

நெறியால் விடுந்தூண் பதினாறு மேயங்கு நின்றனவே

திருவெள்ளறைக் கல்வெட்டு - செந்தமிழ்த் தொகுதி 41, பக், 215) இப்பாடலில் குறிக்கப்பெற்றுள்ள கண்ணன் என்பார் சோழன் கரிகாற் பெருவளத்தான் மீது பட்டினப்பாலை என்னும் நூலை இயற்றிய கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்ற புலவர் பெருமான் ஆவர். இவருக்கு அவ்வேந்தன் பதினாறு நூறாயிரம் பொன் பரிசிலாக வழங்கி அந்நூலைப் பெற்றுக்கொண்டான் என்று கலிங்கத்துப் பரணி கூறுகின்றது.