உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




186

.வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் -4 ராசனோடு தன் தூதர்கள் மூலம் சமாதானம் பேசத் தொடங்கினான். பிறகு, அப்பாண்டி மன்னன் இவனைப் பொன்னமராவதிக்கு அழைப்பித்துத் தனக்கு ஆண்டு தோறுங் கப்பஞ் செலுத்திக் கொண்டு சோழ நாட்டைஅரசாண்டு வருமாறு ஆணையிட்டுத் தலைநகரையும் பிறவற்றையும் அளித்தனன். தன் நாட்டைப் பெற்ற ராசராசனும் முடிகொண்ட சோழபுரத்திற்குச் சென்று முன்போல ஆட்சிபுரிந்து கொண்டிருந்தான். முதல் மாறவர்மன் சுந்தர பாண்டியனது மூன்றாம் ஆட்சி யாண்டுக் கல்வெட்டுக்கள், அவனைச் ‘சோணாடு கொண்டருளிய சுந்தர பாண்டிய தேவர்" எனவும், 'சோணாடு வழங்கியருளிய சுந்தர பாண்டிய தேவர்2 எனவும் கூறுவதால் அவன் ராசராசனைப் போரில் வென்று சோழ நாட்டைக் கைப்பற்றியமையும் பிறகு அந்நாட்டை இவனுக்குத் திரும்ப அளித்தமையும் ஆகிய இரண்டு நிகழ்ச்சி களும் கி.பி. 1219-ஆம் ஆண்டில் நடைபெற்றிருத்தல் வேண்டும் என்பது தெள்ளிது.

இனி, திருவெள்ளறையில் செய்யுள் வடிவிலுள்ள கல்வெட் டொன்று முதல் மாறவர்மன் சுந்தரபாண்டியன் இராச ராசனை வென்று கைப்பற்றிய சோணாட்டைத் திரும்ப இவனுக்கு அளித்த போது அதில் ஒரு பகுதியைப் பிரித்துத் தனக்கு உதவி புரிந்த மகதையர் கோனாகிய வாணாதிராயனுக்கு வழங்கினான் என்று கூறுகின்றது. சோழ நாட்டின் தென் பகுதியில் புதுக்கோட்டை பக்கங்களில் காணப்படும் வாணர்களின் கல்வெட்டுக்கள் தனை உறுதிப்படுத்துதல் அறியத் தக்கது.3 உ

3

இச் செய்திகள் எல்லாம் இராசராசன் கல்வெட்டுக்களில் காணப்படவில்லையாயினும் சுந்தரபாண்டியன் கல்வெட்டுக் களில் விளக்கமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. தோல்வி யெய்தியவன் போர் நிகழ்ச்சிகளைத் தன் கல்வெட்டுக்களில்

4

1. Inscriptions of the Pudukkottai State, No. 249; Ins. 358 of 1916.

2. Ins. 322 of 1927 - 28.

3. வாணர்கள் பாண்டியரது ஆதரவு கொண்டு தெற்கே குறுநில மன்னராயினமை கி. பி. 1219-ம் ஆண்டிற்குப் பின்னரே யென்பது இதனாற் புலனாதல் காண்க. A.R.E. for 1939, part II, para 27; Ins. 196 of 1938-39.

4. Inscriptions of the Pudukkottai State, No. 290; S.I.I., Vol. IV, No. 372; Ibid, Vol. V, No. 300.