உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 2

187

கூறாமல் விடுதலும் வெற்றி பெற்றவன் அவற்றையெல்லாம் தன் கல்வெட்டுக்களில் குறிப்பிடுதலும் இயல்பேயாம்.

இனி, சுந்தர பாண்டியன் தான் கைப்பற்றிய சோழ நாட்டைச் சில திங்கள்களுக்குள் இராசராசனுக்கு அளித்தமைக்குக் காரணம் போசள மன்னனாகிய இரண்டாம் வல்லாள தேவனும் அவன் மகன் வீர நரசிம்மனும் இடையிற் புகுந்து இச் சோழ மன்னனுக்குப் பல்வகையாலும் உதவிபுரிய வந்தமையேயாம். அன்னோர் முயற்சி இல்லையேல் சுந்தர பாண்டியன் சோழ நாட்டைத் திரும்பக் கொடுத்திருக்க மாட்டான் என்பது திண்ணம். அவர்கள் இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இராச ராசனுக்கு உதவி புரிந்திருத்தல் வேண்டும் என்பது, அவர்கள் புனைந்துகொண்ட சோழ இராச்சியப் பிரதிட்டாசாரியன் 'பாண்டிய கஜகேசரி சோழ குல ஏகரட்சகன்” என்னும் பட்டங்களால் நன்கு வெளியாகின்றது. அன்றியும், சகநாத விசயம் என்ற நூலின் ஆசிரியராகிய உருத்திரப்பட்டர் என்பார் இரண்டாம் வல்லாள தேவன் ராசராச சோழனுக்கு உதவி புரிந்து அவனை அரியணை ஏற்றினான் என்று அந்நூலில் கூறியிருப்பது இச் செய்தியை உறுதிப்படுத்துதல் காண்க.

91

போசள வேந்தனாகிய இரண்டாம் வல்லாளத்தேவன் இராசராச சோழன்பால் இத்துணை அன்புபூண்டு ஒழுகி யமைக்குக் காரணம் அவன் ஒரு சோழர்குலப் பெண்மணியை மணந்திருந்தமை' என்பது அறியற்பாலது. அன்றியும், தென் புலத்தில் தோன்றியுள்ள புதிய வல்லரசொன்று நடுவில் அமைந்த சோழ இராச்சியத்தைக் கவர்ந்து கொள்ளும்படி விட்டுவிட்டால், அது வாய்ப்பு நேருங்கால் தன் பேரரசுக்கும் இடையூறு விளைக்க முயலும் என்று அவ் வல்லாள தேவன் கருதியிருத்தல் வேண்டும் என்பது ஒருதலை. இக் காரணங்கள் பற்றியே அவன் இராசராசனுக்கு உதவி புரிந்தனன் எனலாம்.

1. Journal of Indian History, Vol. VI, p. 200.

2. Ibid, pp. 200 and 201.

3. Ibid, p. 203.

4. Ibid, pp. 199 and 200.

5. Annual Report on South Indian Epigraphy for 1912, part II, para 30.