உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




188

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 4 இராசராசனது ஐந்தாம் ஆட்சியாண்டில் நிகழ்ந்த கலகம்

திரு

இனி, தஞ்சை ஜில்லாவிலுள்ள தலைச்செங்காடு, ருவேள்விக்குடி, 2 உடையாளூர்' என்ற ஊர்களில் காணப் படுங் கல்வெட்டுக்கள் இராசராசனது ஐந்தாம் ஆட்சியாண்டில் ஒரு கலகம் நிகழ்ந்தது என்றும் அதில் ஊர்க் கணக்குப் புத்தகங் களையும் பத்திரங்களையும் பிறவற்றையுங் இழக்கும்படி நேர்ந்தது என்றும் கூறுகின்றன. இக் கலக நிகழ்ச்சிக்குரிய காரணம் தெளிவாகப் புலப்படவில்லை. எனினும் மகதநாட்டுக் குறுநில மன்னனாகிய வாணகோவரையன் என்பான் இராசராச னோடு முரண்பட்டு, கி. பி. 1221-ம் ஆண்டில் சோழ நாட்டின் மீது படையெடுத்து உள்நாட்டில் குழப்பத்தையும் கலக்கத்தையும் உண்டுபண்ணிப் பலவற்றை அழித்திருத்தல் வேண்டும் என்பது திருவேள்விக்குடியிலுள்ள கல்வெட்டால்" உய்த்துணரக் கிடக் கின்றது. அவ் வாணகோவரையன் மூன்றாங் குலோத்துங்கனது ஆட்சியின் பிற்பகுதியிலேயே சோழ மன்னனோடு பகைமை கொள்ளத் தொடங்கிவிட்டான் என்பது திருவண்ணா மலையிலுள்ள ஒரு கல்வெட்டால்' அறியப் படுகின்றது. எனவே, குலோத்துங்கன் இறந்த பிறகு இராச ராசன் ஆட்சியின் முற்பகுதியில் அவன் சோழ நாட்டின்மேல் படையெடுத் திருத்தல் வேண்டும் என்பது திண்ணம். பல்லவர் குலக் குறுநில மன்னனாகிய கோப்பெருஞ் சிங்கனும் வாண கோவரையனும் ஒருங்கு சேர்ந்து படையெடுத்து அக் கலகத்தை நிகழ்த்தியிருத் தலும் இயல்பேயாம். திருவேள்விக்குடிக்கு அண்மையிலுள்ள நீடுரில் கி.பி. 1231-ல் வரையப் பெற்ற கல்வெட்டொன்று அந்நிலப்பரப்பு முன்பு கோப்பெருஞ் சிங்கன் ஆளுகைக்கு

1. Ins. 213 of 1925.

2. Ins. 141 of 1926.

3. Ins. 309 of 1927.

4. Ins. 141 of 1926. இராசராசனது 5 ஆம் ஆட்சியாண்டில் நிகழ்ந்த கலகத்தில் வாணகோவரையனுடைய பரிவாரத்தினர் திருவேள்விக்குடிக் கோயிலிலிருந்த கடவுட் படிமங்களைத் தூக்கிச் சென்று பழையாறையிலுள்ள திருச்சத்திமுற்றம் என்னுங் கோயிலில் வைத்து விட்டனர் என்றும் பிறகு அவற்றைத் தேடிக் கண்டு பொருள் கொடுத்து வாங்கி வரும்படி நேர்ந்தது என்றும் திருவேள்விக்குடிக் கல்வெட்டுக் கூறுவது அறியத்தக்கது. 5. S.I.I.,Vol. VIII, No. 106.

6. Ins. 536 of 1921.