உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 2

1

189

உட்பட்டிருந்தது என்று உணர்த்துவது அவ் வுண்மையை வற்புறுத்தும் எனலாம். அவ்விருவர் செயலாலும் சோழநாடு அல்லற்பட்டுக் கொண்டிருந்ததை யறிந்த போசள மன்னனாகிய இரண்டாம் வீரநரசிம்மன் என்பான் கி. பி. 1222-ல் அந்நாட்டிற்குப் பெரும்படையுடன் மீண்டும் வந்து, அவர்களை யடக்கி நம் ராசராசனுக்கு உதவி புரிந்தான் என்று தெரிகிறது. எனினும் வாணகோவரையனும் கோப்பெருஞ் சிங்கனும் மாறவர்மன் சுந்தரபாண்டியனோடு சேர்ந்துகொண்டு சோழ நாட்டிற்குப் பல்வகையாலுந் தீங்குகள் இழைக்க முயன்றமையோடு ராசராசனுக்கு அடங்காமல் தனியரசு புரியவும் தொடங்கி விட்டனர். ஆகவே, துவாரசமுத்திரத்திலிருந்து அரசாண்டு கொண்டிருந்த போசள மன்னர்கள் சோழ நாட்டையும் இராசராசனையும் காப்பாற்றுதற் பொருட்டு அடிக்கடி வரவேண்டிய இன்றியமையாமை ஏற்பட்டுக் கொண்டிருந்தது எனலாம். தென்னார்க்காடு ஜில்லாவிலுள்ள நெல்வாயில் அறத்துறையில் கி. பி. 1226-ல் வரையப்பெற்றுள்ள கல்வெட் டொன்று' போசள வீரநரசிம்மன் படையெடுத்து வந்து நாட்டையும் கோயில்களையும் அழித்து விட்டுக் கடவுட் படிமங் களைக் கொண்டுபோய் விட்டான் என்று கூறுவது குறிப்பிடத் தக்கதாகும். அவன் அத்தகைய அழிவு வேலைகளைச் செய்த அந்நாடு, வாணகோவரையனுக்காதல் கோப்பெருஞ் சிங்கனுக் காதல் அக்காலத்தில் உரியதாயிருந்திருத்தல் வேண்டும் என்பது ஒருதலை. ஆகவே அந் நிலப்பரப்பு அவ் வீரநர சிம்மனுக்குப் பகைப்புலமாக இருந்தது என்பதும் அது பற்றியே அவ்வழிவு வேலைகளை அவன் அங்கு நிகழ்த்தினன் என்பதும் நன்கு துணியப்படும்.

மாறவர்மன் சுந்தரபாண்டியனது இரண்டாம் படையெழுச்சி

கி.பி. 1219-ல் நடைபெற்ற போரில் தோல்வியெய்திப் பாண்டியனுக்குத் திறை செலுத்திக் கொண்டிருந்த இராசராசன், வளம் பொருந்திய நாட்டையுடைய தனக்கு வலி மிகுதியாய் உளது என்று எண்ணிக்கொண்டு, சில ஆண்டுகளுக்குப் பிறகு 1. Ep. Car., Vol. VI, Cm. 56; Ep. Ind., Vol. VII, p. 162.

2. Ins. 228 of 1929.