உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




190

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 4

அவனது ஏவலைப் பொருட்படுத்தாமலிருந்தமையோடு அவனுக்குத் திறை கொடுக்கவும் மறுத்தனன். அதனையுணர்ந்த சுந்தரபாண்டியன் பெருஞ்சினங் கொண்டு கி. பி. 1231-ல் சோழ நாட்டின்மேல் இரண்டாம் முறை படையெடுத்துவந்தான். இராசராசன் தன் நிலையை நன்குணராமல் நாற்படையுடன் சென்று அவனை எதிர்த்துப் போர்புரிவானாயினன். அப்போது நிகழ்ந்த கடும்போரில் இவன் யானைப்படையும் குதிரைப் படையும் பேரழிவிற் குள்ளாயின. சோணாட்டு வீரர்கள் பல்லாயிரவர் போர்க்களத்தில் உயிர் துறந்தனர். அங்குக் குருதி வெள்ளம் பெருக்கெடுத்தோடுவதாயிற்று. இறுதியில் இராச ராசன் பெருந்தோல்வியெய்தித் தன் நாட்டை இழந்து வேறு நாட்டிற்குச் செல்ல வேண்டிய நிலையை அடைந்தான். இவனுடைய உரிமை மகளிரும் சிறை பிடிக்கப் பெற்றனர். முதல் மாறவர்மன் சுந்தர பாண்டியனது இரண்டாம் படை யெழுச்சியினால் சோழ நாடு எத்துணைத் துன்பங்களுக்கு கு உள்ளாயிற்று என்பது அளவிட்டுரைக்குந்தரத்ததன்று. இப் போரில் வாகை சூடிய சுந்தர பாண்டியன், அந்நாட்களில் சோழர்க்குத் தலைநகராக விளங்கிய முடிகொண்ட சோழ புரத்திற்குச் சென்று, எட்டுத் திசைகளிலும் வெற்றித் தூண் நிறுவி, அந்நகரத்தில் விசயாபிடேகமும் வீராபிடேகமும் செய்து கொண்டான். அவ்வாண்டிலும் அதற்குப் பின்னரும் வரையப் பெற்ற அவன் கல்வெட்டுக்களெல்லாம் 'சீகோ மாறவர்மரான திரிபுவனச் சக்கரவர்த்திகள் சோணாடு கொண்டு முடிகொண்ட சோழபுரத்து வீராபிடேகம் பண்ணியருளிய ஸ்ரீ சுந்தர பாண்டிய தேவர் என்று அவனைப் பாராட்டிக் கூறுவது உணரற்பாலதாம்.

இனி சுந்தர பாண்டியனது முதற் படையெழுச்சியில் நாடிழந்த இராசராசனுக்கு அவன் சோணாடு வழங்கிய செய்தியை விளக்கிக் கூறும் அவனது மெய்க்கீர்த்தி, இரண்டாம் படை யெழுச்சியில் அவன் முடிகொண்ட சோழபுரத்திற்குச் சென்று 1. சுந்தர பாண்டியனது 15ஆம் ஆட்சி யாண்டுக் கல்வெட்டுக்களுள் சில, 'சோணாடு வழங்கி யருளிய சுந்தர பாண்டிய தேவர்' என்றும் வேறு சில 'சோணாடு கொண்டு முடிகொண்ட சோழபுரத்து வீராபிடேகமும் பண்ணியருளிய வீர சுந்தர பாண்டிய தேவர்' என்றும் கூறுவதால் இரண்டாம் படையெழுச்சி அவனது 15 ஆம் ஆட்சி யாண்டின் பிற்பகுதியில் நடைபெற்றதாதல் வேண்டும். (Inscriptions of the Pudukkottai State, Nos. 293, 296, 292, 297 and 298.)