உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




192

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 4

ஜில்லா வந்தவாசிக்கருகிலுள்ள தெள்ளாறு என்னும் ஊரில் போரில் வென்று சிறைபிடித்தான் என்றுணர்த்துகின்றது.

திருவயிந்திபுரக் கல்வெட்டு, இராசராசன் போசள நரசிம்மனால் சிறையினின்றும் மீட்கப்பெற்ற வரலாற்றை விரித்துரைப்பது அறியற்பாலதொன்றாம். அக்கல்வெட்டு கூறுவது கோப்பெருஞ்சிங்கன் சோழச் சக்கரவர்த்தியைச் சேந்த மங்கலத்தில் சிறையில் வைத்துவிட்டு சோழ இராச்சியத்தை அழிப்பதை யறிந்த போசள வீரநரசிம்மன், சோழ மண்டல பிரதிஷ்டாசாரியன் என்னும் சிறப்புப் பெயரை நிலைநிறுத் தாமல் எக்காளம் ஊதுவதில்லை என்று கூறித் துவார சமுத்திரத் திலிருந்து படையெடுத்து வந்து இடையிலிருந்த மகதராச்சியத்தை அழித்து அந்நாட்டு வாணர்குல வேந்தனையும் அவன் உரிமைச் சுற்றத்தினரையும் சிறைபிடித்துக்கொண்டு, திருவரங்கத்திற்கு அண்மையில் கொள்ளிடத்தின் வடகரையில் இரண்டு மைல் தூரத்திலுள்ள பாச்சூரிலே தங்கிக் கோப்பெருஞ்சிங்கன் தேசமும் அழித்து சோழ சக்கரவர்த்தியை எழுந்தருளுவிக்கும்படி தன் படைத் தலைவர்களாகிய அப்பண்ண தண்டநாயகன் சமுத்திர கொப்பைய தண்டநாயகன் ஆகிய இருவர்க்கும் உத்தரவிட, அவர்கள் கோப்பெருஞ்சிங்கனிருந்த எள்ளேரியும்

1.

66

திறையிட் டிருமின்கள் தெவ்வேந்தர் செம்பொன் திறையிட்ட பூம்புகார்ச் சோழன் - சிறை கிடந்த

கோட்டந் தனைநினைமின் கோப்பெருஞ்சிங் கன்கமல

நாட்டங் கடைசிவந்த நாள்”

என்னும் வெண்பாவாலும்

பொன்னி நாடனும் உரிமையும் அமைச்சரும் இருப்பதுன் சிறைக்கோட்டம்'

பொருப்பி ரண்டென வளர்ந்ததோள் வலியினாற் கொண்டது சோணாடு' எனவும்

பிறைபொருத கனமகர கிம்புரிவன் கோட்டுப்

பெருங்களிற்றுச் சோழனையும் அமைச்சரையும் பிடித்துச்

சிறையிலிடக் களிறுவிடு மிண்டன் சீய

திருபுவனத் திராசாக்கள் தம்பி ரானே

எனவும் போதருங் கல்வெட்டுப் பாடற் பகுதிகளாலும் (Ep. Ind., Vol. XXIII, pp. 180 and 181) கோப்பெருஞ்சிங்கன், இராசராசனையும் இவன் சுற்றத்தினரான தேவிமார் களையும் அமைச்சர்களையும், பிடித்துச் சிறையில் வைத்துவிட்டுச் சோணாட்டைக் கவர்ந்து கொண்டமை தெள்ளிதிற் புலனாதல் காண்க. சோ ாட்டின் தென் பகுதி, சுந்தர பாண்டியன் ஆட்சிக் குட்பட்டிருந்தமை கல்வெட்டுக்களால் நன்குணரக் கிடத்தலால், இதில் குறிப்பிடப் பெற்ற கோப்பெருஞ்சிங்கன் கைப்பற்றிய சோணாடு, அந் நாட்டின் வடபகுதியாதல் வேண்டும்.

இது, சிதம்பரந் தாலுக்காவின் தென் பகுதியில் உள்ளதோர் ஊர்.