உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 2

193

சல்லியூர் மூலையும்' சோழ கோனிருந்த தொழுதகையூரும்’ அழித்து, வீரகங்க நாடாழ்வான் சீனத்தரையன், ஈழத்துப் பராக்கிரம பாகு முதலான படைத்தலைவர்களையும் கொன்று, கொள்ளிச் சோழகோன் குதிரைகளையும் கைக்கொண்டு தொண்டை மானல்லூர்' உள்ளிட்ட ஊர்களையும் அழித்து, திருப்பாதிரிப் புலியூரிலே தங்கித் திருவதிகை, திருவக்கரை4 உள்ளிட்ட ஊர்களையும் அழித்து, கெடில ஆற்றுக்குத் தெற்கும் சேந்த மங்கலத்திற்குக் கிழக்கும் உள்ள ஊர்களில் குடிகளைத் துன்புறுத்திப் பெண்டிர்களைச் சிறைபிடித்துப் பொருள் களையுங் கொள்ளைகொண்டு, சேந்தமங்கலத்தின் மேல் படையெடுத்துச் செல்ல முயன்றபோது, கோப்பெருஞ்சிங்கன் நடுக்கமுற்றுச் சோழச் சக்கரவர்த்தியைச் சிறையினின்று விடுத்து எழுந்தருளிவிப்பதாகப் போசள வீரநரசிம்மனுக்கு விண்ணப் பிக்க, அவனும் அச்செய்தியைத் தன் படைத் தலைவர்கட்கு அறிவிக்கவே, அவர்களும் அதற்கு உடன்பட்டு அங்ஙனமே சோழச் சக்கரவர்த்தியை எதிர்கொண்டு வரவேற்றுச் சோழ இராச்சியத்திற்கு அழைத்துவந்தனர் என்பதாம்.

இனி, இராசராசன் சிறையினின்றும் மீட்கப்பெற்றுத் தன் இராச்சியத்தைப் பெற்ற வரலாற்றைக்கூறும் அக் கல்வெட்டு திருப்பாதிரிப்புலியூர்க்கு மேற்கே மூன்று மைல் தூரத்திலிலுள்ள திருவயிந்திரபுரத்தில் வரையப்பெற்றிருத்தலால் அந்நிகழ்ச்சிக ளெல்லாம் முடிவுற்ற பின்னர் அவ்வூரில்தான் போசள தண்ட நாயகர்கள் இச்சோழ மன்னன்பால் விடைபெற்றுக் கொண்டு திரும்பியிருத்தல் வேண்டும் என்பது ஆராய்ச்சியில் வல்ல அறிஞர்களது கருத்து. அன்றியும் அஃது இராசராசனது

5

1. இது, சிதம்பரந் தாலுக்காவில் வீரநாராயணன் ஏரியின் கீழ் கரையில் தென்கோடியிலுள்ள ஓர் ஊராகும்; இந்நாளில் கலியமலை என்று வழங்கப்படுகிறது.

2. இது, விருத்தாசலம் தாலூகாவில் தொழுவூர் என வழங்குகிறது.

3. இது, கூடலூர்த் தாலூகாவில் தொண்டைமானத்தம் என்று இந்நாளில் வழங்கப் பெற்று வரும் ஊராகும்.

4. திருவதிகை என்பது திருநாவுக்கரசு அடிகளை இறைவன் சூலைநோய் நீக்கி ஆட் கொண்டருளிய தலம்; பண்ணுருட்டி புகைவண்டி நிலையத்திற் கண்மையிலுள்ளது. திருவக்கரை என்பது விழுப்புரம் தாலூகாவிலுள்ள பாடல் பெற்ற ஒரு சிவஸ்தலம் ஆகும். 5. Ep. Ind., Vol. VII, P. 162.