உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 2

211

அப்பேரரசின் கீழ் அடங்கி அதற்குத் திறை செலுத்தும் சிறு நாடாயிற்று. அதனை யாண்டு கொண்டிருந்த இராசேந்திர சோழனும் சிற்றரசன் ஆயினான். இவன் ஆற்றலும் வீரமும் ஒருங்கே படைத்தவனாயினும் ஊழ்வினையால் இத்தகைய தாழ்ந்த நிலையைத் தன் ஆட்சியின் பிற்பகுதியில் எய்தும் படி நேர்ந்தது என்பது ஒருதலை.

இராசேந்திரன் ஆட்சியின் இறுதிக்காலம்

இவனது 13,15ஆம் ஆட்சி யாண்டுகளில் வரையப்பெற்ற இரு கல்வெட்டுக்கள் முறையே கடப்பை ஜில்லா நந்தலூரிலும் கர்நூல் ஜில்லா திரிபுராந்தகத்திலும் உள்ளன; ஆனால், 15 ஆம் ஆட்சியாண்டாகிய கி. பி. 1261 க்குப் பிற்பட்ட இவன் கல்வெட்டுக்கள் சோழ நாட்டில் மாத்திரம் இருக்கின்றனவே யன்றி அதற்கு வெளியே யாண்டும் காணப்படவில்லை. ஆகவே, இவனது ஆட்சியின் பிற்பகுதியில் சோழ இராச்சியம் சோணாட்டளவில் சுருங்கிப் போய்த் தன் பெருமையை இழந்து விட்டது என்பது உறுதியாதல் காண்க.

-

இராசேந்திரனது ஆட்சியின் 33 - ஆம் ஆண்டுக் கல்வெட் டொன்று வேதாரணியத்தில் இருத்தலால் இவன் முப்பத்து மூன்று ஆண்டுகள் ஆட்சி புரிந்து கி. பி. 1279 இல் இறந் திருத்தல் வேண்டும் என்பது திண்ணம். இவன் பட்டத்தரசி சோழகுல மாதேவி என்று வழங்கப் பெற்றனள் என்பது திருவெண்ணெய் நல்லூரிலுள்ள ஒரு கல்வெட்டால் புலப்படு கின்றது. இவனுக்குத் தலைநகராயிருந்தது கங்கைக் கொண்ட சோழபுரமேயாகும். அழகிய பெருமாளாகிய சோழகங்கன்', பிள்ளை குறுக்கையுடையான்', களப்பாளன்', சோழியவரையன்',

1. Ins. 580 of 1907.

2. Ins. 201 of 1905.

3. Ins. 492 of 1904.

4. Ins. 427 of 1921.

5. Ins. 202 of 1908.

6. Ins. 204 of 1908.

7. Ins. 339 of 1925.

8. Ins. 210 of 1908.