உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




212

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் -4

வீரசோழப் பிரமராயன், விழுப்பாதராயன்' என்போர் இவன் ஆட்சிக் காலத்தில் அரசியல் அதிகாரிகளாக இருந்தனர். தஞ்சை வாணன் கோவையின் ஆசிரியராகிய பொய்யாமொழிப் புலவரைப் பேரன்புடன் ஆதரித்து அவர்க்கு அரிய நண்பனாக விளங்கிய கண்டியூர்ச் சீநக்கனும், புகழேந்திப் புலவரை ஆதரித்து நளவெண்பாவை இயற்றுவித்துப் புகழ்கொண்ட முரணைநகர்ச் சந்திரன் சுவர்க்கியும் இவ்விராசேந்திரன் காலத்தில் நிலவிய அரசியல் தலைவர்களாயிருத்தல் வேண்டும் என்பது சில ஆதாரங்களால் அறியக் கிடக்கின்றது.

இராசேந்திரனுக்குப் பிறகு பட்டம் பெற்றுச் சோழ நாட்டை அரசாண்ட சோழ மன்னன் ஒருவனும் இலன். ஆதலால், இவனுக்குப் புதல்வன் இல்லை என்பது தேற்றம். எனவே, கி. பி. இல் இவன் இறந்த பின்னர், சோழ நாடு பாண்டிய இராச்சியத்தோடு சேர்க்கப்பெற்றுப் பாண்டிய வேந்தரது ஆட்சிக் குள்ளாயிற்று. இவனோடு சோழரது தனியரசும் முடிவுற்றது.

1279

-

1. Ins. 420 of 1911.

2. Ibid.