உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




214

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் -4

கல்வெட்டொன்று' உணர்த்துகின்றது. கி.பி.1482-ல் திருவானைக் காவிலுள்ள கோயிலுக்கு ஒருவேலி நிலம் நிவந்தமாக அளித்துள்ள வாலக காமயனான அக்கலராசன் என்பவன், தன்னை ‘உறையூர் புர வராதீசுவரன்' எனவும் ‘சோழ நாராயணன்' எனவும் கூறிக்கொள்வதை அங்குள்ள அவன் கல்வெட்டால்’ அறியலாம். கி.பி. 1530-ல் திருவரங்கத்தில் உறையூர் வல்லி நாச்சியாரை எழுந்தருளுவித்து நாள் வழிபாட்டிற்கு நிவந்த மாகப் பொருள் வழங்கியுள்ள பாலயதேவ மகாராசன் என்பான் தன்னைச் சோழ பால மகிபதி என்று தன் கல்வெட்டில்’ குறித்துள்ளனன். கும்பகோணத்திலுள்ள ஆலயத்திற்கு வயலூர் ஏழாங்கட்டளை ஆகிய இரண்டு ஊர்களையும் அளித்த மகா மண்டலேசுவரன் உருத்திரதேவ சோழ மகாராசன் என்பவன் ஒருவன் கி.பி.1554-ல் இருந்தனன் என்பது அக்கோயிலிலுள்ள ஒரு கல்வெட்டால் புலப்படுகின்றது. ஈண்டுக் குறிப்பிடப் பெற்ற தலைவர்களுள் வீரசோழன் மகன் வீரசம்பன், சோழர் மரபினன் அல்லன்; சம்புவராயன் மரபினன் ஆவன். மற்றை யோர் எல்லாம் விசயநகர வேந்தர்களின் பிரதிநிதிகளாகச் சோழ நாட்டிலும் பிற இடங்களிலும் கி.பி. பதினான்கு பதினைந்து பதினாறாம் நூற்றாண்டுகளில் ஆண்டுகொண்டிருந்த தெலுங்கச் சோழர் ஆவர். அவர்களுடைய பட்டங்களெல்லாம் அன்னோர் தெலுங்கச் சோழர் என்பதைத் தெளிவாக உணர்த்துகின்றன. எனவே; அவர்களுள் எவரும் நம் மூன்றாம் இராசேந்திர சோழன் வழித் தோன்றல்கள் அல்லர் என்பது நன்கு துணியப்படும்.

நம் தமிழகத்தின் கீழ்பகுதி சோழ மண்டலம் என்னும் பெயருடன் தம் பெயரால் எக்காலத்தும் நின்று நிலவுமாறு

1.Ep. Ind., Vol. III, No. 12 B. இவ் வீரசம்பன் காலத்துக் கல்வெட்டொன்று வடார்க்காடு ஜில்லாவிலுள்ள திருவல்லத்தில் உளது. (Ibid. 12 A)

2. Ep. Ind., Vol. III, No. 12 C.

3. S.I.I., Vol. IV, No. 503.

4. Ins. 291 of 1927; ARE. for 1927, part II, para 34.

5. S.I.I.,Vol. VII, Nos. 55 and 107.

6. இத் தலைவர்கள் விசயநகர வேந்தர்க்கு உட்பட்ட மண்டலங்களை ஆட்சி புரிந்தமைபற்றி மகாமண்டலேசுவரர் என்று வழங்கப் பெற்றனர் என்பது கல்வெட்டுக்களால் அறியப்படு கின்றது.