உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 2

215

தொன்றுதொட்டு அங்கு ஆட்சி புரிந்துவந்த தமிழ் வேந்தர் களாகிய சோழர்களது அரசும் மறைந்தொழிந்தது. அவ்வர சொழிந்து சற்றேறக்குறைய அறு நூற்றறுபத்தைந்து ஆண்டுகள் ஆயின எனலாம். அதன் பின்னர் அவர்களது நாடு பிற மொழி யாளரான அயல் நாட்டார் பலர் ஆளுகைக் குள்ளாக்கி, அதனால் அடைந்த அல்லல்களும் மாறுதல்களும் அளவற்றன என்பது வரலாற்றாராய்ச்சியாளர் பலரும் அறிந்ததேயாம். காலச் சக்கரத்தின் சுழற்சியினால் ஏற்படும் மாறுதல்களுக்கு ஒரு நாடு எங்ஙனம் உட்படாமலிருத்தல் கூடும்? எனினும், முற்காலத்தில் பல்வகையாலும் மக்கட்கு நலம் புரிந்து, சீருஞ் சிறப்புமுற அரசாண்ட சோழ மன்னர்களை நினைவு கூர்தற்குரிய சாதனங்கள் நம் தமிழ் நாட்டில் ஆங்காங்கு இருத்தலை இக் காலத்தும் காணலாம். உத்தம சோழபுரம், கண்டராதித்தம், இராசேந்திரப் புரம், அருமொழி தேவபுரம், கங்கைகொண்ட சோழபுரம், சயங்கொண்ட சோழபுரம், வீரசோழபுரம், இராசேந்திரப் பட்டணம், விக்கிரமம், மதுராந்தகம் முதலான ஊர்கள், அவ்வேந்தர்களின் பெயர்களை நம்மனோர்க்கு அறிவுறுத்திக் கொண்டு இன்றும் இருந்து கொண்டிருக்கின்றன. அவர்கள் வெட்டிய வீரசோழ வடவாறு, மதுராந்தக வடவாறு, முடி கொண்ட சோழப் பேராறு வீரசோழனாறு, கீர்த்தி மார்த்தாண்டன், விக்கிரமசோழப் பேராறு முதலான ஆறுகளும் வீரநாராயணன் ஏரி, சோழ வாரிதி. கண்டராதித்தப் பேரேரி, சோழகங்கம், செம்பியன் மாதேவி ஏரி முதலான நீர் நிலைகளும் கட்டிய பேரணைகளும் நம் நாடு குன்றாப் பெருவளங்கொழித் திடுமாறு இப்பொழுதும் விளங்கிக் கொண்டிருக்கின்றன. அவர்கள் எடுப்பித்த ஆதித்தேச்சுரம், அரிஞ்சயேச்சுரம், இராசரா சேச்சுரம், கங்கைகொண்டசோழச்சுரம், செம்பியன் மாதேவீச் சுரம், விக்கிரமசோழேச்சுரம், இராசாதிராசேச்சுரம், குலோத்துங்க சோழ விண்ணகரம் முதலான பெருங் கோயில்களும் கற்றளி களாக அமைத்த பாடல்பெற்ற திருக்கோயில்களும், அவர் களுடைய வீரச் செயல்களையும் அறச் செயல்களையும் ஆட்சி முறைகளையும் மற்றும் பல அரிய சரித உண்மைகளையும் உணர்த்தும் எண்ணிறந்த எண்ணிறந்த கல்வெட்டுக்களைத் தம்பாற் கொண்டு, வான் அளாவ உயர்ந்து நிற்கும் விமானங்களுடன்