உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 2

கொங்க ரொதுங்கக் கொங்கணர் சாயமற் றெத்திசை மன்னருந் தத்தமக் கரணெனத் திருமலர்ச் சேவடி உரிமையி லிறைஞ்ச அங்கவன் மகிழுங் கங்கையொப் பாகிய தெரிவையர் திலதந் தியாக பதாகை புரிகுழல் மடப்பிடி புனிதகுண வநிதை திரிபுவன முழுதுடையா ளெனவுட னிருப்ப ஊழி அந்நெடு மாலா கத்துப்

பிரியா தென்றுந் திருமக ளிருந்தென மாதர் மடமயில் பூதலத் தருந்ததி

அரணியல் கற்பிற் றரணிமுழு துடையா

ளிவன்திரு மார்வத் தருளொடு மிருப்பச்

செம்பொன் வீரச் சிம்மா சனத்து

திரிபுவன முழுதுடையா ளோடும்

வீற்றிருந்தருளிய கோப்பர கேசரி வர்மரான

223

திரிபுவனச் சக்கரவர்த்திகள் ஸ்ரீ விக்கிரம சோழ தேவர்க்கு

П

யாண்டு:-

பூமாது புணரப் புவிமாது வளர

நாமாது விளங்க ஜயமாது விரும்பத் தன்னிரு பதமலர் மன்னவர் சூட மன்னிய வுரிமையால் மணிமுடி சூடிச்

செங்கோல் சென்று திசைதொறும் வளர்ப்ப வெங்கலி நீங்கி மெய்யறந் தழைப்பக்

கலிங்க மிரியக் கடமலை நடாத்தி

வலங்கொ ளாழி வரையாழி திரிய

இருசுட ரளவு மொருகுடை நிழற்ற

விஜயாபிஷேகம்பண்ணி வீரசிம்ஹாசனத்து

முக்கோக்கிழானடிகளோடும் வீற்றிருந்தருளிய

கோப்பரகேசரிவன்மரான திரிபுவனச்சக்கரவர்த்திகள்

ஸ்ரீவிக்கிரம சோழதேவர்க்கு யாண்டு:-

1. அரணிய