உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




224

1.

இரண்டாங் குலோத்துங்க சோழன்

பூமன்னுபதுமம் பூத்தவே ழுலகுந்

தாமுன்செய் தவத்தால் பருதிவழித் தோன்றி நெடுமா லிவனெனச் சுடர்முடி சூடி இருநில மகளை உரிமையிற் புணர்ந்து

திருமகள் பணைமுலைச் செஞ்சாந் தணைந்து பருமணி மார்வம் பனிவரை'நிகர்ப்பச் சயமகள் செழுந்தண் சந்தனச் சுவட்டால் புயமிரு கயிலைப் பொருப்பெனத் தோன்ற நாமகள் தானும்எங் கோமகன் செவ்வாய்ப் பவளச் சேயொளி படைத்தன னியானெனத் தவள நன்னிறந் தனித்துடை யோரெனப் புகழ்மகள் சிந்தை மகிழு நாளிலும் ஒருகுடை நிலவும் பொருபடைத் திகிரி வெயிலுங் கருங்கலி இருளினைத் துரப்ப நீடுபல் லூழி ஏழ்கடற் புறத்தினுங் கோடாச் செந்தனிக் கோலினி துலாவ மீனமும் சிலையுஞ் சிதைத்து வானுயர் பொன்னெடு மேருவிற் புலிவீற் றிருப்ப உம்ப ரியானை ஓரெட் டினுக்கும் தம்ப மென்னத் தனித்தனி திசைதொறும் விசைய த்தம்ப நிற்பப் பசிபகை யானது தீங்கு நீங்க

மன்னுயிர் தழைப்ப மனுவாறு விளக்க மாதவர் தவமும் மங்கையர் கற்பும் ஆதி அந்தண ராகுதிக் கனலு மீதெழு கொண்டல் வீசுதண் புனலு மேதினி வளருஞ் சாதி ஒழுக்கமும் நீதி அறமும் பிறழாது நிகழப்

நிகற்ப