உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 2

பாவும் பழனப் பரப்பும் பணைக்கை மாவு மல்லது வன்றளைப் படுதல் கனவிலுங் காண்டற் கரிதென வருநதிப் புடையினும் பல்வேறு புள்ளினு மல்லது சிறையெனப் படுத லின்றி நிறைபெருஞ் செல்வமோ டவனி வாழப் பல்லவர் தெலுங்கர் மாளுவர் கலிங்கர் கோசலர் கன்னடர் கடாரர் தென்னர் சேரலர் சிங்கணர் கொங்கணர் சேதிபர் திரிகர்த்தர் வங்க ரங்கர் வத்தவர் மத்திரர்

கங்கர் சோனகர் கைகயர் சீனரென்

றறைகழல் வேந்தரும் எல்லா வரைசரும்

முறைமையில் வருந்தித் திறைகொணர்ந் திறைஞ்ச

அம்பொன் மலர்கொடிச் செம்பியன் கிழானடி

ஒருமருங் குடனமர்ந் திருப்ப அருள்புரி

சிமயப் பொற்கொடி இமயப் பாவையுஞ்

சிவனும் போலப் புவனமுழு துடையா

ளிவன்திரு மணிமார்வத்

துலகமுழு துடையா ளெனவுட னிருப்பச் செம்பொன் வீர சிம்மா சனத்துப்

புவனமுழுதுடையாளோடும் வீற்றிருந்தருளிய இராஜகேசரிவன்மரான திரிபுவனச்சக்கரவர்த்திகள் குலோத்துங்க சோழதேவர்க்கு யாண்டு:-

225