உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 2

229

உலகுடைமுக்கோக்கிழானடிகளென்னுமலகில்கறபிலரவிந்தமடையுந் திருந்தியதன்பெருங்குணத்திற்சிறந்தோங்கியறந்தழைக்கும் அருந்ததியாமென்னவரும்பெருமையும்அவனிமுழுதுடையாளும், மன்னியபெரும்புகழ்படைத்ததென்னவன்கிழானடிகளும் ஊழியூழிபலகற்பம்வாழிமணம்புணர்ந்திருப்ப

உதயகிரி உச்சியேறிம திவெண்குடைபுதுநிழற்கீழ்ச்

சந்திரமுகமண்டலத்துத்தாமரைக்குள்செம்பவளவாய் இந்த்தரநீலகுஞ்சரமோசடிளம்பிடியுடனிசைந்ததெனச்

செம்பொன் வீரசிம்மாசனத்துப்புவனமுழுதுடையாளொடும் வீற்றிருந்தருளிய கோப்பரகேசரி பன்மரான திரிபுவனச் சக்கர வர்த்திகள் ஸ்ரீ ராஜராஜதேவர்க்கு யாண்டு ஏழாவது கன்னி நாயிற்று அமரபட்சத்து நவமியும் புதன்கிழமையும் பெற்ற ஆயில்யத்து..நாள்.......

П

பூமருவி திருமாதும் புவிமாதும் செயமாதும்

நாமருவிய கலைமாதும் புகழ்மாதும் நயந்துபுல்க

அருமறை விதிநெறி யனைத்துந் தழைப்ப வருமுறை யுரிமையில் மணிமுடி சூடித் திங்கள் வெண்குடைத் திசைக்களி றெட்டுந் தங்கு தனிக்கூடந் தானென விளங்கக் கருங்கலிப் பட்டியைச் செங்கோல் துரப்பப் பொருகதி ராழி புவிவளர்த் துடன்வர வில்லவ ரிரட்டர் மீனவர் சிங்களர்

பல்லவர் முதலிய பார்த்திவர் பணிய

எண்ணருங் கற்பம் மண்ணகம் புணர்ந்து

செம்பொன் வீர சிம்மா சனத்து

புவனமுழு துடையாளொடும் வீற்றிருந் தருளிய கோப்பரகேசரிவன்மரான திரிபுவனச் சக்கரவர்த்திகள்

ஸ்ரீ ராஜராஜ தேவர்க்கு யாண்டு:-