உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




230

இரண்டாம் இராசாதிராச சோழன்

I

கடல்சூழ்ந்த பார்மாதரும் பூமா தருங் கலைமாதரும் அடல் சூழ்ந்த போர் மாதரும் சீர்மாதரும் அமர்ந்து வாழ நாற்கடல்சூழ் புவியேழும் பாற்கடல்போல் புகழ் பரப்ப ஆதியுக மாமென்னச் சோதிமுடி புனைந்தருளி அறுசமயமும் ஐம்பூதமும் நெறியில்நின்று பாரிப்பத் தென்னவருஞ் சேரலரும் சிங்களரும் முதலாய

மன்னவர்கள் திறைசுமந் வந்தீண்டிச் சேவிப்ப

ஊழிஊழி ஒருசெங்கோல் ஏழுபாரும் இனிதளிப்பச்

செம்பொன் வீர சிங்காசனத்து

உலகுடை முக்கோக் கிழானடிகளோடும்

வீற்றிருந்தருளிய கோவிராஜகேசரிவன்மரான

திரிபுவனச் சக்கரவர்த்திகள் ஸ்ரீ இராஜாதிராஜ தேவர்க்குயாண்டு:-

கடல்சூழ்ந்த பாரேழுந் திசையெட்டுங் காத்து நின்று

தடமாமதி யெனவிளங்கித் தரளவெண்குடை நிலாவெறிப்ப ஆழிவரை வரப்பாக அடற்கலியைப் பிலத்தொதுக்கி ஊட ஊழிதொறும் புகழோங்க ஓராழி வெயிற்பரப்பக் கயல்சிலையி லாரில்(?) வரையகன்றாளயிற் கரங்குவிப்பப் புயலாழிற் போற்றிசெயப் புலிமேருவில் வீற்றிருப்ப

திருவாணையுஞ் செங்கோலுந் திசையெட்டுங் காவல் கொள்ளப் பெருவாழ்வு பெற் றுயிரனைத்தும் பி...

சமையமாறுந் தலையெடுப்பத் தருமமுமரு மறையுமோங்கி

அமைவில்லா மனுவொழுக்க மாதியாம்படி நிலைநிற்க

ஓர்ப்பினும்தம் முறுகனவிலும் ஒன்றோடொன்று பகையின்றிப்

போர்ப்புலியும் புல்வாயும் புக்கொருதுறை நீருண்ணப்

பொன்னிநதியும் பொய்யாது புயலும் புனலோவாது