உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மூன்றாம் குலோத்துங்க சோழன்

I

புயல்பெருக வளம்பெருப் பொய்யாத நான் மறையின் செயல்வாய்ப்பத் திருமகளும் சயமகளும் சிறந்துவாழ வெண்மதிபோற் குடை விளங்க வேல்வந்த ரடிவணங்க மண்மடந்தை மனமகிழ மனுவின் நெறி தழைத்தோங்கச் சக்கிரமுஞ் செங்கோலுந் திக்கனைத் துஞ்செல்லக் கற்பகாலம் புவிகாப்பப் பொற்பமைந்த முடிசூடி விக்ரமபாண்டியன் வேண்டவிட்ட தண்டால்

வீரபாண்டியன் மகன்'படஏழகம்' படமறப்

படைபடச் சிங்களப் படைமூக் கறுப்புண்டு

அலைகடல் புகவீர பாண்டியனை முதுகிடும் படிதாக்கி

மதுரையும் அரசும்கொண்டு ஜயஸ்தம்ப நட்டு

அம்மதுரையு மரசும் நாடும் அடைந்த பாண்டியற்களித்தருளி

மெய்ம்மலர்ந்த வீரக்கொடியுடன் தியாகக் கொடி எடுத்துச்

செம்பொன் வீர சிங்கா தனத்துப்

புவனமுழு துடையாளோடும் வீற்றிருந்தருளிய

கோப்பரகேசரிவன்மரான திரிபுவனச் சக்கரவர்த்திகள்

ஸ்ரீகுலோத்துங் சோழதேவர்க்கு யாண்டு:-

231

புயல்வாய்த்து மண்வளரப் புலியாணையும் சக்கரமும் செயல்வாய்த்த மனுநூலும் செங்கோலுந் திசைநடப்பக் கொற்றவையும் திருவும்வாழக் கொடுங்கலிகெடக்குளிர்

வெண்குடைக்

கற்பகாலம் படிகவிப்பக் கதிரவன்குல முடிசூடி எத்தரையுந் தொழுமிறைவற் கெதிரம்பலஞ் செம்பொன்

வேய்ந்து

5

1. மக்கள்,

2. ஏழகத்தார்