உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




232

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 4

சித்திரைவிழா அமைத்திறைவி திருக்கோபுரஞ் செம்பொன்

வேய்ந்து

அரிபிரமர் தொழுமிறைவற் ககிலமெல்லாந் தொழுது போற்றத்

திரிபுவன வீரீச்சுரஞ் செய்துதிரு வைகாசியுஞ்

சிறந்ததிரு வாவணியுந் திசைவிளக்கு..... யூர்

நிறைந்தசெல்வத் துடன்விளங்க நிலவுந் திருநாள்கண்டு

10

மன்னுயிர்க் கருளளிக்கும் வானவர் நாயகர் வாழ

அருளமைந்த திருமலைபோல் கோயில் கண்டு

தாரணிகொள் திருத்தாதைக்கும் இராசராசீச் சுரத்தார்க்கும்

காரணச்சிறந்தகோயில் அணிதிகழ்பொன்வேய்ந்தருளித் தனியாணைவிட்டாண்மைசெய்து வடமன்னரைத்

தறைப்படுத்தி

முனிவாறிக் கச்சிபுக்கு முழுதரசையுந் திறைகவர்ந்து

15

தாங்கரும்போர் வடுகைவென்று வேங்கைமண்டலந்தன தாக்கிப் பொன்மழைபெய் துறந்தையென்னும் பொன்னகர் புக்கருளித் தண்டொன்றால் வழுதி மைந்தனை மூக்கரிந்துதமிழ் மதுரை கொண்டுவிக்கிரம பாண்டியற்குக் கொடுத்து மீண்டதற் பின்

பரிபவத்தா

லெடுத்துவந்து நெட்டூரில் எதிர்த்தவீர பாண்டியன் முடித்தலைகொண் டமர்முடித்தவன் மடக்கொடியை

20

வேளமேற்றித்

திருவிழந்த தென்னவனுஞ் சேரலனும் வந்திறைஞ்சி

அரியணையின் கீழிருப்ப அவன்முடிமே லடிவைத்துப் படிவழங்கிமுடி வாங்கிப் பாண்டியர்க்கு விடைகொடுத்துக் கொடிவழங்கும் வில்லவர்க்குக் கொற்றவர்பெறாத் திருவழங்கி பாரறிய வாழ்வருளிப் பரிகலத்தி லமுதளித்துப்

25

பருதிகுல பதியென்று திருநாமந்தரித்த பாண்டியற்கு இருநெதியும் பரிசட்டமும் இலங்குமணிக் கலனுநல்கி

30

ஈழமண்டல மெறிந்தருளி ஆழிமண்டலத் தரசிறைஞ்சப் பூழியர் கெடக்கொங்கும் பாழ்படப் பொருதுபுக்குக் கருவூரிற் சோழகேரளனென்று மன்னர் தொழ

விசையமா முடிசூடி வீரமுடி புனைவதற்கு

35

விட்டெழுந்து பன்னதான் வந்துடன் போர்மலையப்?