உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




240

சேர்க்கைII

சோழ மன்னர்களைப் பற்றிய பழைய பாடல்கள்

முதற்குலோத்துங்க சோழன்

ஒருவர் ஒருவர்மேல் வீழ்ந்து வடநாடர்

அருவர் அருவரென அஞ்சி - வெருவந்து

தீத்தீத்தீ யென்றயர்வர் சென்னி படைவீரர்

போர்க்கலிங்க மீதெழுந்த போது.

1

கோட்டந் திருப்புருவங் கொள்ளா வவர்செங்கோல்

2

கோட்டம் புரிந்த கொடைச் சென்னி - நாட்டஞ்

சிவந்தன வில்லை திருந்தார் கலிங்கஞ்

சிவந்தன செந்தீத்தெற

கரடத்தான் மாரியுங் கண்ணால் வெயிலும்

3

நிரைவயிரக் கோட்டா னிலவுஞ் சொரியுமால் நீளார்த் தொடையதுல னேரார் கலிங்கத்து வாளாற் கவர்ந்த வளம்.

தடங்குலவு நாண்மாலைத் தாமத்தன் கையில் விடங்குலவு வெள்வாள் விதிர்ப்ப- நடுங்கியதே கோண்மேவு பாம்பின் கொடுமுடிய தல்லவோ வாண்மே வியகலிங்கர் மண்.

வாட்டாறு கொங்கம் வடகலிங்கந் தென்மதுரை கோட்டாறுங் கொண்ட குலதீபன்- ஏட்டில்

5

4

1.

எழுத்திருபத் தெட்டிட்டா னென்றரசர் கேட்டுக் கழுத்திருபத் தெட்டிட்டார் காண்.

தண்டியலங்காரம்,106 மேற்கோள்.

2. வீரசோழியம், அலங்காரப்படலம், 31 மேற்கொள்.

3. தண்டியலங்காரம், 59 மேற்கோள்

4. கலிங்கத்துப் பரணிக் கையெழுத்துப் பிரதிகளின் இறுதியிற் கண்ட பாடல்; பெருந்தொகை, பக். 178.

5. மேற்படி