உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




250

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 4

மாசிக் கடலாடி வீற்றிருக்க மண்டபமும்

58

பேசற் றவற்றைப் பெருவழியும்-ஈசற்குத்

தென்புலியூர்க் கேயமைத்தான் கூத்தன் திசையனைத்து

மன்புலியா ணைநடக்க வைத்து.

ஓங்கியபொன் னம்பலத்தார்க் கோரா யிரஞ்சுரபி

59

ஆங்களித்தா னேற்றெதிர்ந்தா ராயிழையார் -தாங்கா

தொருக்கியுட லாவி யுயிர்த்துநாட் போக்கி

யிருக்கவென்ற தொண்டையா ரேறு.

தொல்லோர்வாழ் தில்லைச் சுடலையமார்ந் தார்கோயில்

60

கல்லா லெடுத்தமைத் தான் காசினியிற் -றொல்லை

மறைவளர்க்க வெங்கலியை மாற்றிவழு வாமல்

அறம்வளர்க்கக் காலிங்க னாய்ந்து.

தில்லைமூ வாயிரவர் தங்கள் திருவளர

எல்லையில்பே ரேரிக் கெழின்மதகு-கல்லினாற்

றானமைத் தான் றெவ்வேந்தர்க் கெல்லாந் தலந்தவிர

வானமைத்தான் தொண்டையார் மன்.

காலிங்கராயன் திருவதிகையில் செய்த திருப்பணியைப் பற்றிய பாடல்கள்

61

பொன்மகர தோரணமும் பூணணியும் பட்டிகையுந்

62

தென்னதிகை நாயகர்க்குச் செய்தமைத்தான்-மன்னவர்கள்

தன்கடைவாய் நில்லாதார் தாள்வரைவாய் நின்றுணங்க மின்கடைவேற் காலிங்கர் வேந்து.

மின்னிலங்கு பொற்சதுக்க மேகடம்ப மென்றிவற்றைத்

63

தென்னதிகை நாயர்க்குச் சேர்த்தினான் தென்னவர்தந்

தோணோக்கும் வென்றி துறந்தே சுரநோக்க

வாணோக்குங் காலிங்கர் மன்.

வில்லில் வெயிலனைய வீரட்டர் தந்திருநாள்

64

நல்லநெயீ ரைஞ்ஞூற்று நாழியால்-வல்லி

யுடனாடக் கண்டான்றன் னொன்னலர்க்குக் கண்கள்

இடனாடச் செல்கூத்தன் ஈண்டு.

59.61.சிதம்பரக் கல்வெட்டுக்கள்; ளு.ஐ.ஐ. ஏடிட. ஐஏ, யீ.34

62-64.திருவதிகைக் கல்வெட்டுக்கள்; பெருந்தொகை, பக், 254.