உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 2

மண்டபமு மாளிகையும் வாழதிகை வீரட்டர்க்

கெண்டிசையுமேத்த வெடுத்தமைத்தான்-விண்டவர்கள் நாள்வாங்கச் சேயிழையார் நாண்வாங்க நற்றடக்கை வாள்வாங்குங் காலிங்கர் மன்.

251

65

மன்னொளிசேர் நூற்றுக்கான் மண்டபத்தை மால்வரையால் 66 மன்னதிகை நாயகர்க்கு வந்தமைத்தான் -மன்னர்

இசைகொடா தோட விகல்கொண்டாங் கெட்டுத்

திசைகொடார் கூத்தன் தெரிந்து.

மன்னுதிரு வீரட்டர் கோயின் மடைப்பள்ளி

தன்னைத் தடஞ்சிலையா லேசமைத்தான் -தென்னர்

குடமலை நாடெறிந்து கொண்டவேற் கூத்தன்

கடமலைமால் யானையான் கண்டு.

அதிகை யரனுக் கருவரையாற் செய்தான்

மதிகை நெடுங்குடைக்கீழ் மன்னர்-பதிகள் உரியதிருச் சுற்று முடன்கவர்ந்த கூத்தன் பெரியதிருச் சுற்றைப் பெயர்த்து.

67

68

அருமறைமா தாவி னறக்காமக் கோட்டந்

69

திருவதிகைக் கேயமையச் செய்து-பெருவிபவங்

கண்டா னெதிர்ந்தா ரவியத்தன் கைவேலைக்

கொண்டானந் தொண்டையர் கோ.

தென்னதிகை வீரட்டஞ் செம்பொனால் வேய்ந்திமையோர் 70

பொன்னுலகை மீளப் புதுக்கினான் - மன்னுணங்கு

முற்றத்தான் முற்றுநீர் வையம் பொதுக்கடிந்த

கொற்றத்தான் தொண்டையர் கோ.

வானத் தருவின் வளஞ்சிறந்த நந்தவனம்

71

ஞானத் தொளியதிகை நாயகர்க்குத் தானமைத்தான்

மாறுபடுத் தாருடலம் வன்பேய் பகிர்ந்துண்ணக்

கூறுபடுத் தான்கலிங்கர் கோ.

எண்ணில் வயல்விளைக்கும் பேரேரி யீண்டதிகை

72

அண்ணல் திருவிளங்க வாங்கமைத்தான்-மண்முழுதுந்

65-71.திருவதிகைக் கல்வெட்டுக்கள்; பெருந்தொகை பக்கங்கள், 254,255.