உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




252

.வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் -4

தங்கோன் குடைநிழற்கீழ்த் தங்குவித்த வேற்கூத்தன் எங்கோன் மணவிலா ரேறு.

ஐயொருப தாயிரமாம் பூக மதிகையிலே

73

மைவிரவு கண்டர்க்கு வந்தமைத்தான்-வெய்யகலி

போக்கினான் மண்ணைப் பொதுநீக்கித் தங்கோனுக்

காக்கினான் தொண்டையர்கோ னாங்கு.

அராப்புனையும் நம்மதிகை வீரட்டா னர்க்குக்

74

குராற்பசுவைஞ் ஞூறு கொடுத்தான்-பொராப்புறந்தான்

கண்டருக்குத் தான்கொடுத்த காலிங்கன் காசினிக்குத் தண்டருப்போ னின்றளிப்பான் றான்.

வாரி வளஞ்சுரக்க வாழதிகை நாயகருக்

75

கேரியு மூரு மிசைந்தமைத்தான்-போரிற்

கொலைநாடு வெஞ்சினவேற் கூத்தன் குறுகார் மலைநாடு கொண்டபிரான் வந்து.

அம்மா னதிகையிலே யம்பொற் றடமிரண்டும்

76

செம்மா மலரிலகச் செய்தமைத்தான் -கைம்மாவின்

ஈட்டநின்ற வெம்பாமற் கண்டருளென் றீண்டரசர்

காட்டநின்ற வேற்கூத்தன் கண்டு.

அருளா கரநல்லூ ராங்கமைந்த வேரி

77

இருளார் களத்ததிகை யீசன்-அருளாரச்

சென்றமைத்தான் தென்னாடன் சாவேற்றின் றிண்செருக்கை

யன்றமைத்தான் தொண்டையர்கோ னாங்கு.

போதியி னீழற் புனிதற் கிறையிலிசெய்

தாதி யதிகையின்வா யாங்கமைத்தான்-மாதர்முலை

நீடுழக்கா ணாகத்து நேரலரைத் தன்யானைக்

கோடுழக்காண் கூத்தன் குறித்து.

78

மாசயிலத் தம்மைக்கு வாழதிகை வீரட்டத்

79

தீசனிடமருங்கி லேந்திழைக்கு-மாசில்

முடிமுதலா முற்றணிகள் சாத்தினான் வேளாண்

குடிமுதலான் தொண்டையர் கோன்.

72-78. திருவதிகைக் கல்வெட்டுக்கள்; பெருந்தொகை, பக்கங்கள், 255, 256.