உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 2

அலைகொன்று வருகங்கை வாராமன் மேன்மே

லடைக்கின்ற குன்றூ டறுக்கின்ற பூதம்

மலைகொன்று பொன்னிக்கு வழிகண்ட கண்டன்

வரராச ராசன்கை வாளென்ன வந்தே.

தாராக வண்டந் தொடுத் தணிந்தார்

தமக்கிடம் போதத் தமனியத்தாற்

சீராச ராசீச் சரஞ்சமைத்த

தெய்வப் பெருமாளை வாழ்த்தினவே

பிரட்டனை யேபட்டங் கட்டழித்துப்

பேரே ழரையிலக் கம்புரக்க

இரட்டனை யேபட்டங் கட்டிவிட்ட

இராசகம் பீரனை வாழ்த்தினவே.

257

105

106

107

அழிவந்த வேதத் தழிவுமாற்றி

அவனி திருமகட் காகமன்னர்

108

வழி வந்த சுங்கந் தவிர்த்தபிரான்

மகன்மகன் மைந்தனை வாழ்த்தினவே.

செருத்தந் தரித்துக் கலிங்கரோடத்

தென்றமிழ்த் தெய்வப் பரணிகொண்டு

109

வருத்தந் தவிர்த்துல காண்டபிரான்

மைந்தற்கு மைந்தனை வாழ்த்தினவே

முன்றிற் கிடந்த தடங்கடல்போய்

முன்னைக் கடல்புகப் பின்னைத்தில்லை

110

மன்றிற் கிடங்கண்ட கொண்டல்மைந்தன்

மரகத மேருவை வாழ்த்தினவே

இஞ்சியின் வல்லுரு மேறு கிடந்த

111

வஞ்சியின் வாகை புனைந்தவன் வாழியே.

105. தக்கயாகப்பரணி பா, 549

106. மேற்படி, பா. 772.

107. மேற்படி, பா. 774.

108. தக்கயாகப்பரணி. பா.775

109. மேற்படி, பா.776

110. மேற்படி, பா.777.

111. மேற்படி, பா.800