உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




258

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 4

தென்னவர் தென்மது ராபுரி சீறிய

112

மன்னவர் மன்னன் வரோதயன் வாழியே.

பார்தரு வார்பெற மாறில் பசும்பொன்

113

தேர்தரு மாபர கேசரி வாழியே.

வாழிய மண்டல மால்வரை

வாழி குடக்கோழி மாநகர்

114

வாழிய வற்றாத காவிரி

வாழி வரராச ராசனே.

மூன்றாம் குலோத்துங்க சோழன்

மேய இவ்வுரை கொண்டு விரும்புமாம்

115

சேய வன்திருப் பேரம்ப லஞ்செய்ய

தூய பொன்னணி சோழன்நீ டூழிபார்

ஆய சீரன பாயன் அரசவை.

நற்றமிழ் வரைப்பி னோங்கு நாம்புகழ் திருநாடென்றும்

பொற்றடந் தோளால் வையம் பொதுக்கடிந் தினிதுகாக்குங்

116

கொற்றவன் அனபா யன்பொற் குடைநிழற் குளிர்வ தென்றால்

மற்றதன் பெருமை நம்மால் வரம்புற விளம்பலாமோ.

கையின்மான் மழுவர் கங்கைசூழ் சடையில்

கதிரிளம் பிறைநறுங் கண்ணி

ஐயர்வீற் றிருக்குந் தன்மையி னாலும்

அளப்பரும் பெருமையினாலும்

மெய்யொளி தழைக்குந் தூய்மையி னாலும்

வென்றிவெண் குடையன பாயன்

செய்யகோ லபயன் திருமனத் தோங்குந்

திருக்கயி லாயநீள் சிலம்பு.

117

112. மேற்படி, பா.803.

113. மேற்படி, பா. 807.

114. மேற்படி, பா. 812.

115. பெரியபுராணம், பாயிரம், 8

116. பெரியபுராணம், திருநாட்டுச் சிறப்பு, 35

117. மேற்படி, திருமலைச் சிறப்பு, 12