உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 2

அன்ன தொன்னக ருக்கர சாயினான்

துன்னு செங்கதி ரோன்வழித் தோன்றினான்

259

118

மன்னு சீரன பாயன் வழிமுதல்

மின்னு மாமணிப் பூண்மனு வேந்தனே

சென்னி வெண்குடை நீடன பாயன்

திருக்கு லம்புகழ் பெருக்கிய சிறப்பின்

119

மன்னு தொல்புகழ் மருதநீர் நாட்டு

வயல்வ எந்தர இயல்பினி லளித்துப்

பொன்னி நன்னதி மிக்கநீர் பாய்ந்து

புணரி தன்னையும் புனிதமாக்குவதோர்

நன்னெடும்பெருந் தீர்த்தமுன் னுடைய

நலஞ்சி றந்தது வளம்புகார் நகரம்.

பொன்மலைப் புலிநின்றோங்கப் புதுமலை யிடித்துப்

போற்றும்

120

அந்நெறி வழியேயாக அயல்வழி யடைத்த சோழன்

மன்னிய அனபா யன்சீர் மரபின் நகரமாகும்

தொன்னெடுங் கருவூ ரென்னுஞ் சுடர்மணி வீதிமூதூர்.

சென்னி அபயன் குலோத்துங்க சோழன் தில்லைத்

திருவெல்லை

121

பொன்னின் மயமாக்கியவளவர் போரே றென்றும் புவிகாக்கும் மன்னர் பெருமான் அனபாயன் வருந்தொன்மரபின் முடிசூட்டும் தன்மை நிலவு பதியைந்தின் ஒன்றாய் நீடுந் தகைத்தவ்வூர். எம்பிரான் சிவனே எல்லாப் பொருளுமென் றெழுது

மேட்டில்

122

தம்பிரா னருளால் வேந்தன் தன்னைமுன் னோங்கப் பாட அம்புய மலராள் மார்பன் அனபாயன் என்னுஞ் சீர்த்திச் செம்பியன் செங்கோ லென்னத் தென்னன்கூன் நிமிர்ந்த தன்றே.

118. மேற்படி, திருநகரச் சிறப்பு, 13

119. மேற்படி, இயற்பகை நாயனார் புராணம், 1

120. பெரியபுராணம், எறிபத்த நாயனார் புராணம்,2

121.மேற்படி, சண்டேசுர நாயனார் புராணம், 8

122. மேற்படி, திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் புராணம், 847