உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 2

11

பயிற்சி பெற்று இளமையிலேயே ஒப்பற்ற வீரனாகத் திகழ்ந்தனன்

எனலாம்.

அஃது அங்ஙனமாக, சோழநாட்டில் வீரராசேந்திர சோழனுக்குப் பிறகு சில திங்கள் வரையில் அரசாண்ட அவன் புதல்வன் அதிராசேந்திரன் கி. பி 1070 ஆம் ஆண்டில் இடையில் நோய்வாய்ப்பட்டு இறந்தனன்'. அவனுக்கு மகப்பேறின்மை யாலும் சோழர் மரபில் வேறு அரசகுமாரன் ஒருவனும் இல்லாமை யாலும் சோணாடு அரசனின்றி அல்லலுற்றது. குறுநில மன்னரது கலகம் ஒரு புறமும் உண்ணாட்டுக் குழப்பம் மற்றொரு புறமும் எழுந்தன. சோழநாட்டு மக்கள் எல்லோரும் அமைதியான வாழ்வின்றி ஆற்றொணாத் துன்பத்துள் ஆழ்ந்தனர். கலிங்கத்துப் பரணியின் ஆசிரியராகிய சயங்கொண்டார் அக்குழப்பத்தையும் கலகத்தையும் தம் நூலில் தெளிவாகக் கூறியுள்ளார்'. அன்றியும், சோழநாடு அரசனின்றிக் குழப்பத்திற் குள்ளாயிருந்தது என்பது நம் இராசேந்திரன் மெய்க்கீர்த்திகளாலும் நன்கறியக் கிடக்கின்றது.

1. அதிராசேந்திரசோழன், சோழநாட்டில் நிகழ்ந்த கலகத்தில் கொல்லப்படவில்லை என்பதும் அவன் நோய்வாய்ப்பட்டே இறக்க நேர்ந்தது என்பதும் முன் அதிகாரத்தில் விளக்கப் பட்டுள்ளன.

2. "மறையவர் வேள்விக்குன்றி மனுநெறி யனைத்து மாறித் துறைகளோ ராறுமாறிச் சுருதியு முழக்க மோய்ந்தே

"சாதிக ளொன்றோ டொன்று தலைதடுமாறி யாரும்

ஓதிய நெறியினில்லா தொழுக்கமு மறந்து போயே'

""

ஒருவரை யொருவர் கைம்மிக் கும்பர்தங் கோயில்சாம்பி

(க-பரணி-245)

(GLOMLIL, 246)

அரிவையர் கற்புச் சோம்பி யரண்களுமழிய வாங்கே கலியிருள் பரந்தது (மேற்படி 247)

3. அருக்க னுதயத் தாசையி லிருக்கும்

கமல மனைய நிலமக டன்னை

முந்நீர்க் குளித்த வந்நாள் திருமால்

ஆதிக் கேழ லாகி யெடுத்தன்ன

யாதுஞ் சலியா வகையினி தெடுத்துத் தன்குடை நிழலி லின்புற விருத்தித் திகிரியும் புலியுந் திசைதொறும் நடாத்திப் புகழுந் தருமமும் புவிதோறும் நிறுத்தி

தென்றிசைத்

தேமரு கமலப் பூமகள் பொதுமையும் பொன்னி யாடை நன்னிலப் பாவை தனிமையுந் தவிர வந்து புனிதத் திருமணிமகுடம் உரிமையிற் சூடித் தன்னடி யிரண்டுந் தடமுடியாகத்

(S.I.I., Vol. III, No. 66)