உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




12

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 4

ங்ஙனம் சோழநாடு அரசனின்றி நிலைகுலைந்திருந்த செய்தியை வடபுலத்தில் போர் புரிந்து கொண்டிருந்த இராசேந்திரன் அறிந்து, கங்கைகொண்ட சோழனுடைய மகள் வயிற்றுப் பேரன் என்னும் உரிமை பற்றி அச்சோழநாட்டு ஆட்சியைத் தான் அடையலாம் என்றெண்ணித் தலைநகராகிய கங்கைகொண்ட சோழபுரத்திற்கு விரைந்து சென்றான். அங்கிருந்த அமைச்சர், படைத்தலைவர் முதலான அரசியல் அதிகாரிகள் எல்லோரும், இவ்வரசகுமாரன் தக்க சமயத்தில் வந்தமைக்குப் பெரிதும் மகிழ்ந்து, இவனது உரிமையையும் ஏற்றுக்கொண்டு சோழர் மரபில் எவரும் இல்லாமையால், சோணாட்டு ஆட்சியை இவனுக்கே அளிப்பது என்று உறுதி செய்தனர். அங்ஙனமே இவனுக்கு முடி சூட்டுவதற்குத் தக்க ஏற்பாடு செய்யப்பட்டது. கி.பி. 1070 ஆம் ஆண்டு சூன் திங்கள் 9 ஆம் நாளில்' தலைநகரத்தில் இவன் முறைப்படி முடி சூட்டப்பெற்றனன்'. அந்நன்னாளில் குலோத்துங்கசோழன் என்னும் அபிடேகப் பெயரும் எய்தினன்.

தொன்னில வேந்தர் சூட முன்னை மனுவாறு பெருகக் கலியாறு வறப்பச்

செங்கோல் திசைதொறுஞ் செல்ல

(S.I.I.,Vol. III. No. 701)

இராசேந்திரன் வந்தபோது சோழநாடு அரசனின்றித் துன்புற்றிருந்தமை இக் கல்வெட்டுக் களால் நன்கு பெறப்படுதல் காண்க.

1. Ep. Ind. Vol. VII, Page 7. Ibid, Vol. XXV. Page 246.

2. இவன் சோழநாட்டு ஆட்சியைப் பெற்றமை பற்றி வரலாற்று ஆராய்ச்சியாளருக்குள் கருத்து வேறுபாடு உண்டு. சிலர் அதிராசேந்திரனைக் கொன்றோ அல்லது கொல்வித்தோ இவன் அதனைக் கவர்ந்தனன் என்பர். (Annual Report on South Indian Epigraphy for 1899 para 51) வேறு சிலர், வைணவர்களை அதிராசேந்திரன் துன்புறுத்தியமையால் அன்னோர் நிகழ்த்திய கலகத்தில் கொல்லப்பட்டான் என்றும் அச்சமயத்தில் இவன் ஆட்சியைக் கைப்பற்றிக்கொண்டான் என்றும் கூறுவர். மற்றுஞ் சிலர், கங்கைகொண்ட சோழன் மனைவி, தன் பேரனாகிய இவனைச் சுவீகாரம் எடுத்துக்கொண்டனள் என்பர். அதிராசேந்திரன் நோய்வாய்ப்பட்டிருந்தமைக்குக் கல்வெட்டில் ஆதாரம் இருத்தலாலும் நம் குலோத்துங்கன் சோழநாட்டை யடைந்தபோது அரசனின்றி அந்நாடு அல்லலுற்ற நிலையில் இருந்தது என்று கல்வெட்டுக்களும் கலிங்கத்துப் பரணியும் ஒருங்கே கூறுவதாலும் (S.I.I. Vol. III Nos. 66 and 70); (க.பரணி, அவதாரம் தா. 27 முதல் 32 முடிய) அதிராசேந்திரன் ஆட்சியில் திருமால் கோயில் கற்றளியாக ஆக்கப்பட்டிருத்தலாலும் அவன் ஆளுகையில் சோழநாடு கலகமின்றி அமைதியாகவே இருந்தமைக்கு ஆதாரங்கள் முன் அதிகாரத்தில் எடுத்துக்காட்டப் பெற்றுள்ளமையாலும் அவர்கள் கூறுவன எல்லாம் சிறிதும் பொருந்தாமை காண்க. கங்கைகொண்ட சோழனுக்குப் புதல்வர் ஐவர் இருந்தனர் என்பது கல்வெட்டுக்களால் அறியக்கிடத்தலால் அவன் மனைவி குலோத்துங்கனைச் சுவீகாரப் புதல்வனாகக் கொண்டனள் என்பதும் பொருந்தாது. கலிங்கத்துப்பரணி இவனை அவள் பாராட்டியதைக் கூறுகின்றதே யன்றி அவ்வாறு உணர்த்தவில்லை என்பது அறியத்தக்கது.