உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 2

13

சோழமன்னர்கள் முடிசூட்டப்பெறும் நாளில் இராசகேசரி பரகேசரி என்ற பட்டங்களை ஒருவர்பின் ஒருவராக மாறி மாறிப் புனைந்துகொண்டு ஆட்சிபுரிந்துவந்தனர் என்பது முன்னர் விளக்கப்பட்டுளது. அன்னோர் ஒழுகிவந்தவாறு நம் குலோத்துங்கனும் இராசகேசரி என்னும் பட்டம் புனைந்து அரசாளத் தொடங்கினான். இவன் அதனைப் புனைந்து கொண்டமைக்குக் காரணம், இவனுக்கு முன் ஆட்சிபுரிந்து நோய்வாய்ப்பட்டிருந்த அதிராசேந்திரசோழன் பரகேசரி என்னும் பட்டமுடையவனாயிருந்தமையேயாம். எனவே, சோணாட்டு ஒழுகலாற்றில் ஒரு சிறிதும் தவறாதவாறு இவன் நடந்துகொண்டமை காண்க.

இவ்வாறு கீழைச்சளுக்கிய அரசகுமாரனாகிய இராசேந்திரன் குலோத்துங்கசோழன் என்னும் பெயருடன்'. சோழ இராச்சியத் திற்குச் சக்கரவர்த்தியாக முடி சூட்டப் பெற்றவுடன் உண்ணாட்டுக் குழப்பம் ஒழியவே, சோழமண்டலத்தில் யாண்டும் அமைதி நிலவுவதாயிற்று. குறுநில மன்னர்களும் இவனுக்கு அடங்கி ஒழுகுவாராயினர். இவன், நாட்டு மக்களுக்கு நலம் புரிவதையே தன் குறிக்கோளாகக் கொண்டு ஆட்சி புரிந்தமையின் இன்றியமை யாதன போக எஞ்சிய பயனற்ற போர்கள் எல்லாவற்றையும் இயன்றவரையில் நீக்கிக் கொண்டே வந்தமை அறியற்பாலதாகும். இவன் மாமன்மார் துங்கபத்திரை யாற்றிற்கு வடக்கேயுள்ள மேலைச் சளுக்கியரது குந்தள நாட்டைக் கைப்பற்றி அதனைச் சோழ இராச்சியத்தோடு சேர்க்கவேண்டும் என்ற எண்ணத்துடன் தம் ஆட்சிக் காலங்களில் அங்குப் படையெடுத்துச் சென்று பல டங்களில் போர் புரிந்தமை முன்னர் விளக்கப் பெற்றுளது. அப்போர் நிகழ்ச்சிகளில் அன்னோர் எய்திய இன்னல்கள் பலவாம். பல்லாயிரக் கணக்கான சோணாட்டு வீரர்கள் குந்தள

1.

2.

குலோத்துங்கன் என்னும் பெயருடைய சோழமன்னருள் இவனே முதல்வனாதலின் இவனை முதற் குலோத்துங்க சோழன் என்றே வரலாற்று ஆராய்ச்சியாளர் கூறுவர். நிழலிலடைந்தன திசைகள் நெறியிலடைந்தன மறைகள்

கழலிலடைந்தன ருதியர் கடலிலடைந்தனர் செழியர்'

பரிசில் சுமந்தனர் கவிஞர் பகடுசுமந்தன திறைகள் அரசு சுமந்தனர் விறைகள் அவனி சுமந்தன புயமும்’

(க.பரணி, அவதாரம் தா 39, 41)