உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




263

சேர்க்கை V

இரண்டாம் இராசாதிராச சோழனது பல்லவராயன் பேட்டைக் கல்வெட்டு

(1)ஸ்வஸ்தி ஸ்ரீ

டல்சூழ்ந்த பார்மாதரும் பூமாதரும் கலைமாதரும்

அடல்சூழ்ந்த போர்மாதரும் சீர்மாதரும் அமர்ந்துவாழ

(2) நாற்கடல்சூழ் புவியேழும் பாற்கடல்போல் புகழ்பரப்ப ஆதியுகம் ஆமென்னச் சோதிமுடி புனைந்தருளி

(3) அறுசமயமும் ஐம்பூதமும் நெறியில் நின்று பாரிப்பத் தென்னவருஞ் சேரலருஞ் சிங்களரு முதலாய

மன்னவர்கள் திறைசுமந்து வந்திறைஞ்சிச் சேவிப்ப ஊழிசெங்கோல் ஏழுபாரும் இனிதளிப்பச் செம்பொன் (4) வீரசிம்ஹாசனத்து உலகுடைமுக்கோக் கிழானடி களோடும் வீற்றிருந்தருளிய கோவிராஜ கேசரி பன்மரான திரிபுவனச் சக்கரவர்த்திகள் ஸ்ரீராஜாதி ராஜ தேவர்க்கு யாண்டு எட்டாவது

(5) ஜயங்கொண்ட சோழமண்டலத்து ஆமூர்க் கோட்டத்துச் சிறுகுன்ற நாட்டுக் காரிகைக் குளத்தூர்க் குளத்துளான் திருச்சிற்றம்பலமுடையான் பெருமானம்பியார் ஆன பல்லவ

(6) ராயர் பெரிய தேவர் ராஜராஜ தேவர் பத்து கோயிற் கொத்துமானை குதிரை அகம்படி நியாய முள்ளிட்ட துறைகளுக்கும் முதலிகளுமாய் முதலிகள் ஓபாதி காரியத்து

(7) க்குங்கடவருமா யெல்லா வரிசைகளும் முன்னேவல் உள்ளிட்டு முதலிகள் பெறக் கடவ ஏற்றங்களும் பெற்று நின்று