உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




264

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 4

பெரியதேவர் துஞ்சியருளிப் பிள்ளைகளுக்கு ஒன்றும் இரண்டும் திருநட்சத்திரமா

(8) கையால் ஆயிரத்தளிப் படை வீடும் விட்டுப் போத வேண்டிப் போதுகிற இடத்துத் திருவந்தப் ப் புரமும் பரிவாரங்களும் உள்ளிட்டன எல்லாம் பரிகரித்துக் கூட்டிக்கொடு போந்து ராஜ

(9) ராஜபுரத்திலே இருந்த இடத்துக்கு சூழ்ந்த இடன்...... யாறு மிகுதிப்... ரத்து உடன் கூட்டத்தா.... ராலும் எல்லாக் கலக்க.. சோழராஜ்யத்துக்குள்ளேயே யிருப்பார் காரணவருட

........

......

(10) வேண்டிப்புறத்து எல்லா அடைவு கேடுகளும் வராத இடத்து இந்நல்களும் பர்கரித்து இப்.... பெரிய தேவர் எழுந்தருளிய நாளிலே திரு அபிஷேகத்துக்கு உரிய பிள்ளைகள் இன்றியே ......... ருக்கிற

(11) படியைப் பார்த்து முன்னாளிலே காரியம் இருந்தபடி விண்ணப்பஞ் செய்து கங்கைகொண்ட சோழ புரத்திலே எழுந்தருளி யிருக்கிற பிள்ளைகளை பிரயாணம் பண்ணுவித்து உடையார் விக்கிரமசோழ தேவர் பேரனார்

(12) நெறியுடைப் பெருமாள் திருமகனார் எதிரிலிப் பெருமாளைப் பெரிய தேவர் துஞ்சியருளின நாளிலே மண்டை கவிப்பித்துப் போந்தாரானவாறே இவரைத் திரு அபிஷேகம் பண்ணுவிக்கக் கடவராக நிச்செயித்து நாலாந் திருநக்ஷத்திரத்திலே ராஜாதி ராஜதேவர் எ

(13) ன்று திரு அபிஷேகம் பண்ணுவித்து உடன் கூட்டமும் நாடு மொன்றுபட்டுச் செல்லும்படி பண்ணுவித்தருளினார் மிகை செய்யாதபடியும் பரிகரித்து இவர்கள் எல்லோரையுஞ் சேரப்பிடித்துப் பணி அழகிதா

(14) கச் செய்வதொருபடியும் பண்ணி ஈழத்தான் பாண்டி நாட்டிலே படைகளும் காரணவரானாரையும் மிகுதிப் போதவிட்டு இந் நாடு கைக்கொள்ளக் கடவனானப் பண்ணின இடத்துப் பாண்டியனார் குலசேகர தேவர்