உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 2

265

(15) தம்முடைய ராஜ்யம் விட்டுச் சோழ ராஜ்யத்திலே புகுந்து என்னுடைய ராஜ்யம் நான் பெறும்படி பண்ணவேணுமென்று சொல்ல இவர் உடையார் குலசேகர தேவர் பெறும்படி பண்ணக்கட

(16) வராகவும் இந்த ராஜ்யத்திலே புகுந்து வந்து கைக்கொண்ட இலங்கா புரி தண்டநாயகன் உள்ளிட்டாரைக் கொன்று பாண்டியர்கள் இ

(17 ருப்பான மதுரை வாசலிலே இவர்கள் தலை தைப்பிக்கக் கடவராகவும் சொல்லி யிப்படி யெல்லாம் விண்ணப்பஞ் செய்து திருவுள்ளமானபடியே பாண்டியனார் குலசேகர தேவர் சோழ ராச்சியத்தில் இருந்த நாளிலே இவர்க்கு வே

(18) ண்டுவன வெல்லாங் குறைவறச் செய்து பரிகரித்து பலத்தாலும் அர்த்தத்தாலும் உற்சாகத்தாலும் பாண்டிநாடு கைக்கொண்டுதான் சொன்ன படியே இலாங்காபுரி தண்ட நாயகன் உள்ளிட்டாரைக் கொன்று இவர்கள் தலை

(19) மதுரை வாசலிலே தைப்பித்து பாண்டியனார் குலசேகர தேவர் மதுரையிலே புகுகைக்குச் செய்ய வேண்டு வனவும் வ... ஜயத்து செய்வித்து இவரை மதுரையிலே புகவிட்டுப் பாண்டியநாடு ஈழ நாடாகாத

(20) படி பரிகரித்துச் சோழ ராஜ்யம் சென்ற படிக்கு ஈடாகத் தொண்டைநாடும் பாண்டி நாடும் செல்லும்படியும் பண்ணி ராஜ காரியங்கொண்டு நிர்வகிக்கக் கடமை ...குத் தன் கட்டளை யிட்டுக் காரியங்கொண்டு செலுத்தினபடியே தமக்கு பி

(21) ன்பும் இக்கட்டளையிலே காரியஞ் செல்வதொரு படி காரியங்கொண்டு செல்வத்தால் நிற்க இவர் வியாதிபட்டு

இன்றியே ஒழிந்தமையில் இவர் விருந்தங்களுக்கும் மக்களுக்கும் இவர்கள் விருந்தங்களுக்கும் மக்களுக்கும் பெண் மக்களுக்கும் தாயார்க்கும் உட

(22) ன் பிறந்தாளுக்கும் இவன் மக்களுக்கும் இவர்கள் வர்கத்தாருக்கும் விருதராஜ பயங்கர வளநாட்டுக் குறுக்கை