உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 2

15

இனி, இவ்வேந்தன் ஐம்பது ஆண்டுகட்குமேல் ஆட்சி புரிந்துள்ளமையால் நம் தமிழ்நாட்டில் இவன் கல்வெட்டுக்கள் மிகுதியாகக் காணப்படுகின்றன; அன்றியும், மைசூர் இராச்சியத் திலும் தெலுங்கு நாட்டிலும் இவன் கல்வெட்டுக்கள் கிடைக் கின்றன. இவனது நீண்ட ஆட்சியில் வரையப்பெற்ற அக் கல்வெட்டுக்களில் பல மெய்க்கீர்த்திகள் உள்ளன. அவற்றுள், 'திருமன்னி விளங்கும்' என்று தொடங்கும் மெய்க்கீர்த்தி இவனது ஆட்சியில் முதல் நான்கு ஆண்டுக் கல்வெட்டுக்களில் காணப் படுகிறது. இஃது இவனை இராசேந்திர னென்றே குறிப்பிடுகிறது. இம்மெய்க்கீர்த்தி, இவன் இளங்கோப் பருவத்தில் புரிந்த போர் களை அறிவிப்பதோடு இவன் சோழ நாட்டின் ஆட்சியை எவ்வாறு எய்தினான் என்பதையும் உணர்த்துகின்றது. ‘புகழ் சூழ்ந்த புணரி யகழ் சூழ்ந்த புவியில்' என்று தொடங்கும் மெய்க்கீர்த்தி மிகப் பெரியது; இவன் காலத்துப் போர் நிகழ்ச்சிகளையும் பிற செய்திகளையும் நன்கு விளக்குவது; வரலாற்று ஆராய்ச்சிக்குப் பெரிதும் பயன்படுவது; ஆட்சியாண்டுகள் ஏற ஏற வளர்ந்து செல்லும் இயல்புடையது. இஃது இவனது ஆட்சியின் ஐந்தாம் ஆண்டு முதல்தான் கல்வெட்டுக்களில் காணப்படுகின்றது. இம்மெய்க் கீர்த்தியில் இவன்பெயர் குலோத்துங்கசோழன் என்று வரையப் பெற்றிருப்பது குறிப்பிடத் தக்கதொன்றாம். 'புகழ்மாது விளங்கச் செயமாது விரும்ப” என்று தொடங்கும் மெய்க்கீர்த்தி இவனது ஆட்சியின் நான்காம் ஆண்டு முதல் பல கல்வெட்டுக் களில் உளது. இது மிகச் சிறியது; எனவே வரலாற்று ஆராய்ச்சிக்குப் பயன்படுவதன்று. 'பூமேலரிவையும் பொற்செயப் பாவையும், என்று தொடங்கும் மெய்க்கீர்த்தி, திருக்கோவலூரிலுள்ள இவனது ஆட்சியின் ஆறாம் ஆண்டுக் கல்வெட்டொன்றில்தான் காணப் படுகின்றது. இது, 'திருமன்னி விளங்கும்' என்று தொடங்கும் மெய்க்கீர்த்தியைப்போல் இவனது இளங்கோப்பருவத்துப் போர் நிகழ்ச்சிகளையே கூறுகின்றது" 'பூமியுந் திருவுந்தாமே

1. S.I.I., Vol. VII, Nos. 392 and 807.

2. Ibid, Vol. IV, No. 445.

3. S.I.I.,Vol. V, No. 1356.

4. Ibid, Vol. VII, No. 137.