உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




16

,3

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 4 புணரி' எனவும், 'பூமருவிய திருமடந்தையும், எனவும், 'திருமகள் செயமகள் திருப்புயத் திருப்ப எனவும் தொடங்கும் மெய்க் கீர்த்திகள் எல்லாம் இவனுக்குரியனவேயாம்; ஆனால் வரலாற்று ஆராய்ச்சிக்குப் பயன்படுவன அல்ல. சில கல்வெட்டுக்களில் வீரராசேந்திரன் மெய்க்கீர்த்தியில் இரண்டடிகளும் 'புகழ்மாது விளங்கச் செயமாது விரும்ப' என்று தொடங்கும் இவ்வேந்தன் மெய்க்கீர்த்தியும் கலந்து வரையப் பெற்றுள்ளன. அவ்வாறு கலந்தெழுதப்பட்டுள்ளமைக்குக் காரணம் வீரராசேந்திரனுக்கு பிறகு உரிமைப்படி சோழ இராச்சியத்திற்கு அரசனாக்கப் பெற்றவன் குலோத்துங்கனே என்று உணர்த்துவதற்கே யாம் என்பது சிலர் கருத்து. வீரராசேந்திரனும் குலோத்துங்கனும் இராசகேசரி என்னும் பட்டம் புனைந்து அரசாண்டவர்கள். எனவே, இவ்விருவர்க்கும் நடுவில் பரகேசரி என்னும் பட்டம் புனைந்த வேந்தன் ஒருவன் ஆட்சி புரிந்திருத்தல் வேண்டும் என்பது ஒருதலை. ஆகவே, குலோத்துங்கன் புனைந்துகொண்ட ராசகேசரி என்னும் பட்டமே, இவனுக்கு முன்னரும் இராசகேசரி வீரராசேந்திரனுக்குப் பின்னரும் பரகேசரி என்னும் பட்டம் புனைந்த ஓர் அரசன் சோழ நாட்டில் ஆட்சி புரிந்துள்ளனன் என்பதையும் அவன் உரிமையையும் இவன் ஒப்புக்கொண்டுள்ளனன் என்பதையும் நன்கு புலப்படுத்து கின்றது. எனவே, வீரராசேந்திரனுக்குப் பிறகு தானே உரிமைப் படி பட்டம் பெற்றதாகக் கல்வெட்டுக்களின் மூலம் உணர்த்த வேண்டும் என்ற எண்ணம் குலோத்துங்கன்பால் என்பது வெளியாதல் காண்க.

இல்லை

இனி, இவன் மெய்க்கீர்த்திகளின் துணைக்கொண்டு வன் காலத்துப்போர் நிகழ்ச்சிகளை ஆராய்தல் வேண்டும். இவன் தன் இளங்கோப் பருவத்தில் சக்கரக் கோட்ட மண்டலத்தில் ஆட்சிபுரிந்து கொண்டிருந்த தாராவர்ஷன் என்னும் வேந்தன் ஒருவனைப் போரில் வென்று வாகை சூடினான் என்றும் 1. Ibid Nos. 541,875 - 76.

2. Ins No. 425 of 1912.

3. S.I.I., Vol. IV, No. 222.

4. S.I.I., Vol. VIII, No. 752.

5. The Colas Vol. I. page, 350.