உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 2

17

அந்நாட்டிலிருந்த வயிராகரம் என்ற ஊரில் எண்ணிறந்த யானை களைக் கைப்பற்றினான் என்றும் இவன் மெய்க்கீர்த்திகள் கூறுகின்றன. சக்கரக்கோட்டம் என்பது மத்திய மாகாணத்திலுள்ள வத்சஇராச்சியத்திலுள்ளது”. அங்கு இவன் நிகழ்த்திய போர் கலிங்கத்துப் பரணியிலும் சொல்லப்பட்டிருக்கின்றது இவன் எரியூட்டினான் என்றும் அந்நூல் கூறுகின்றது". இவன் இளவரசனாக விருந்த காலத்தில் அப்போர்களை நிகழ்த்தியமைக்குக் காரணம் 1. (a) வஞ்சனை கடந்து வயிராகரத்துக்

குஞ்சரக் குழாம்பல வாரி யெஞ்சலில் சக்கரக் கோட்டத்துத் தாரா வரசனைத் திக்குநிகழத் திறைகொண் டருளி.

(b) விளங்கு சயமகளை யிளங்கோப் பருவத்துச் சக்கரக் கோட்டத்து விக்ரமத் தொழிலால்

புதுமணம் புணர்ந்து மதவரை யீட்டம்

வயிராகரத்து வாரி யயிர்முனைக்

3

(S.I.I., Vol. III, No. 65)

கொந்தள வரசர் தந்தள மிரிய

வாளுறை கழித்துத் தோள்வலி காட்டி

(S.I.I., Vol. III, No. 72)

2. இது 'பஸ்டர் ஸ்டேட்' (Bastar State) என்று இப்போது வழங்குகிறது. இதுவே பழைய வத்ச இராச்சியமாகும். சக்கரக் கோட்டம் 'சித்ரக்கூட்' (Chitrakut) என்று இந்நாளில் வழங்குகிறது; தற்காலத் தலைநகராகிய ஜகதல்பூருக்கு மேற்கே 25 மைல் தூரத்திலுள்ளது. 'சக்ரக்கூடாதீஸ்வரனாம்... தாரவர்ஷ நாமோ நரேஸ்வரா' என்ற குருஸ்பால் கல்வெட்டால் சக்கரக் கோட்டத்தைத் தாராவர்ஷன் ஆண்டமை அறியக்கிடக்கின்றது.

(Ep. Ind., Vol. IX, page 161, 178 & 179)

3. (a) விருதராச பயங்கரன் முன்னோர் நாள்

வென்ற சக்கரக் கோட்டத்திடைக் கொழும் குருதியுங் குடருங் கலந்தட்ட வெங்

கூழ்தெறித்தொரு கண்குருடானவும்

(க.பரணி. 6. தா 14)

(b) மனுக்கோட்டந் தவிர்த்தபிரான் வளவர்பிரான் திருப்புருவத்

தனுக்கோட்ட நமன்கோட்டம் பட்டது சக்கரக்கோட்டம்

(க.பரணி. 10. தா. 23)

(c) மாறுபட் டெழுதண்டெழ வத்தவர்

ஏறுபட்டது மிம்முறையே யன்றோ

(மேற்படி 11. தா. 73)

4.

புரமெரி மடுத்தபொழு ததுவிது வெனத்திகிரி

புகையெரி குவிப்ப வயிரா

கரமெரி மடுத்தரசர் கரமெதிர் குவிப்பதொரு

கடவரை தனைக் கடவியே

(க.பரணி. 10-தா. 21)

வயிராகத்தில் யானைகளும் வைரச் சுரங்கங்களும் முற்காலத்தில் மிகுதியாக இருந்தன என்று ‘அயினி-அக்பரி’ கூறுகின்றது. எனவே, நம் குலோத்துங்கன் எண்ணிறந்த யானைகளை அங்குக் கைப்பற்றினான் என்று இவன் மெய்க்கீர்த்தி கூறுவது பொருத்தமுடையதாம். இவ்வூர் சக்கரக்கோட்டத்திற்கு அண்மையில் உளது. ஆகவே, வத்சராசனாகிய தாராவர்ஷன் ஆட்சிக்கு இஃது உட்பட்டது என்பது வெளிப்படை.

(Ep. Ind., Vol. X, No. 4)