உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




18

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 4

புலப்படவில்லை. கலிங்கத்துப் பரணியின் ஆசிரியர், இவன் இளமையில் திக்கு விசயம் செய்துகொண்டிருந்தபோது சக்கரக் கோட்டத்திலும் வயிராகரத்திலும் போர்கள் நிகழ்ந்தன என்று உணர்த்துகின்றனர். இவனது மெய்க்கீர்த்தியிலும் அத்தகைய குறிப்பொன்று உளது. ஆகவே, இவன் இளங்கோப் பருவத்தில் செய்த திக்கு விசயத்தில் அப்போர்கள் நிகழ்ந்தனவாதல் வேண்டும். அப்போர்களில் வாகை சூடிய இவ்வேந்தன், தோல்வி யெய்திய தாராவர்ஷன்பால் திறைபெற்று மீண்டமையே அவற்றின் பயனாகும். இவன் அப்பக்கத்தில் ஒரு சிறு இராச்சியம் அமைத்து அதனை ஆட்சிபுரிந்து கொண்டிருந்தான் என்பதற்குச் சான்றுகள் காணப்படவில்லை. எனவே, அக்கூற்றுப் பொருந்தாதென்க.

வன் மெய்க்கீர்த்தியிலுள்ள கொந்தளவரசர் தந்தளம் இரிய வாளுறை கழித்துத் தோள்வலி காட்டிப் - போர்ப்பரி நடாத்திக் கீர்த்தியை நிறுத்தி", என்னும் பகுதியை நோக்குங்கால், இவன் சோணாட்டில் ஆட்சி பெறுவதற்கு முன்னர் வடபுலத்தில் மேலைச்சளுக்கியரோடு போர் புரிந்து வெற்றி பெற்றிருத்தல் வேண்டும் என்பது இனிது புலனாகின்றது. அப்போரைப் பற்றிய தெளிவான செய்திகள் கிடைக்கவில்லை. இவன் மாமன் வீரராசேந்திரன். வேங்கி நாட்டிலுள்ள விசயவாடையில் கி. பி. 1067 இல் மேலைச் சளுக்கியரோடு போர் நிகழ்த்தி அன்னோரை வென்று, தன்பால் அடைக்கலம் புகுந்த கீழைச் சளுக்கிய மன்னனாகிய விசயாதித்தனுக்கு அந்நாட்டை வழங்கினான் என்பது முன்னர் விளக்கப்பட்டுள்ளது. விசயவாடையில் நடை பெற்ற அப்போரில் வீரராசேந்திரனுக்கு உதவியாக நம் குலோத்துங்கனும் போர் புரிந்திருத்தல் வேண்டும். அப்போரில் வெற்றியெய்திய பிறகு அந்நாட்டை இவன் விரும்பியவாறு இவன் சிறிய தந்தையாகிய விசயாதித்தனுக்கு வீரராசேந்திரன் அளித்திருத்தல் வேண்டும் என்பதும் இயல்பேயாம். இவன் சிறிய, தந்தைக்கு வேங்கி நாட்டை வழங்கியதாகச் செல்லூர்ச்

1. க. பரணி - தாழிசைகள். 18-20.

2. 'திக்குநிகழத் திறைகொண்டருளி' என்னும் மெய்க்கீர்த்தியடியால் இது பெறப்படுகிறது. 3. The Colas, Vol. I. pages 348 and 357.

4. S.I.I., Vol. III, No. 72.