உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 2

19

செப்பேடுகளில் குறித்திருப்பதும்' அதுபற்றியே போலும். இவன் திக்கு விசயம் செய்து சக்கரக்கோட்டத்தில் தாராவர்ஷ னோடு போர்புரிந்த காலத்தில் அவனுக்கு உதவும் பொருட்டுச் சளுக்கிய விக்கிரமாதித்தன் பெரும் படையொன்றை அனுப்பி யிருத்தல்கூடும். அதனை இவன் வென்று புறங்காட்டியோடும் படி செய்திருக்கலாம். இவ்விரண்டினுள் எதனை அம்மெய்க் கீர்த்தி குறிப்பிடுகின்றது என்பது இப்போது புலப்படவில்லை.

இனி, இவன் ஆட்சிக்காலத்தில் நடைபெற்றுள்ள போர்களை ஆராயுங்கால், அவற்றுள் ஒன்றிரண்டொழிய ஏனையவெல்லாம்

வனது ஆட்சியின் முற்பகுதியிலேயே நிகழ்ந்துள்ளன எனலாம். அப்போர் நிகழ்ச்சிகளைக் கல்வெட்டுக்களின் துணை கொண்டு ஆராய்ந்தறிதல் வேண்டும்.

மேலைச்சளுக்கியரோடு நிகழ்த்திய போர்

இது குலோத்துங்கன் மேலைச்சளுக்கிய மன்னனாகிய ஆறாம் விக்கிரமாதித்தனோடு கி. பி. 1076 ஆம் ஆண்டில் நடத்திய போராகும். தன் மைத்துனனாகிய அதிராசேந்திர சோழன் இறந்த பின்னர். கீழைச் சளுக்கிய அரசகுமாரனாகிய இராசேந்திரன் என்பவன் குலோத்துங்கசோழன் என்னும் பெயருடன் சோழநாட்டில் முடிசூட்டப் பெற்றதை யுணர்ந்த சளுக்கிய விக்கிரமாதித்தன், வேங்கிநாடும் சோணாடும் தெற்கே யுள்ள பிற நாடுகளும் ஒருங்கே ஓர் அரசனது ஆட்சிக் குட்பட்டிருப்பது, தன் ஆளுகைக்குப் பெரியதோர் இடுக்கண் விளைவதற்கு ஏதுவாகும் என்று கருதிக் குலோத்துங்கனுடைய படை வலிமையையும் வீரத்தையும் குலைப்பதற்குப் பெருமுயற்சி செய்து கொண்டிருந்தான். அவன், அம்முயற்சியில் வெற்றிபெறும் பொருட்டு ஐந்து ஆண்டுகளாகப் படை சேர்த்தும் வந்தான். நம் குலோத்துங்கனும் அவன் எண்ணத்தை நன்கறிந்தவனாதலின் வடபுலத்திலிருந்து ஒரு படையெழுச்சி நிகழும் என்பதை எதிர்பார்த்துத் தன் படை வலிமையையும் பெருக்கிக் கொண்டே வந்தனன். அந்நாட்களில் குந்தள நாட்டின் ஒரு பகுதியைச் சளுக்கிய விக்கிரமாதித்தனும் மற்றொரு பகுதியை

1. Ibid, Vol. I, No. 39, Verse. 14.