உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




20

.வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் -4

அவன் தமையனாகிய இரண்டாம் சோமேசுவரனும் ஆட்சி புரிந்துகொண்டிருந்தனர். அவ்விருவர்க்கும் ஒற்றுமை குலைந்து சோமேசுவரனைத் தன்பாற் சேர்த்துக் கொண்டான். விக்கிர மாதித்தன், தன் தம்பியாகிய சயசிங்கனைத் தனக்குதவுமாறு தன்பால் வைத்துக்கொண்டான். பிறகு அவ்வேந்தன், தான் ஐந்து ஆண்டுகளாகச் சேர்த்து வைத்திருந்த படைகளைத் திரட்டிக் கொண்டு சோழ இராச்சியத்தை நோக்கிப் புறப்பட்டு வந்தான். அதன் வடபகுதியாகிய மைசூர் நாட்டில் இருதரத்தினருக்கும் கடும்போர் நடைபெற்றது. ஹொய்சள அரசன் எரியங்கனும்! கடம்பகுல மன்னனாகிய சயகேசியும் திரிபுவனமல்ல பாண்டியனும்; தேவகிரி யதுகுலவேந்தன் சேவுணனும் அப்போரில் சளுக்கிய விக்கிரமாதித்தனுக்கு உதவிபுரிந்தனர். சோமேசுவரன் குலோத்துங்கனுக்கு உதவுவதாக உறுதியளித்த வாறே இவன் பக்கத்திலிருந்து போர்புந்தான். ஆனால், அவன் தோல்வி யெய்தி, தான் ஆட்சி புரிந்துகொண்டிருந்த பகுதியையும் இழக்கும் நிலையை அடைந்தான். எனினும் போர் தொடர்ந்து நடந்தது. கோலார் ஜில்லாவிலுள்ள நங்கிலி யென்னுமிடத்தில் நடைபெற்ற போரில் நம் குலோத்துங்கன் வெற்றி பெற்றதோடு விக்கிரமாதித்தனைத் துங்கபத்திரை யாற்றிற் கப்பால் துரத்தியும் சென்றான். அங்ஙனம் துரத்திச் சென்றவன், இடையிலுள்ள மணலூர்", அளத்தி முதலான இடங்களில் மீண்டும் அவனைப் போரிற் புறங்கண்டான். அளத்தியில் நிகழ்ந்த போரில் இவன் மேலைச்சளுக்கியருடைய களிறுகளைக் கைப்பற்றிக் கொண்டான் என்று இவன் மெய்க்கீர்த்தி கூறுகின்றது. அன்றியும், மைசூர் நாட்டிலுள்ள நவிலையில் சளுக்கிய தண்டநாயகரால் 1. Ep. Car. Vol. V, Ak. 102 (a)

2. Ibid, Vol. VII Ci. 33. இவன் நுளம்பபாடிப் பாண்டியன் S.I.I., Vol. IX, No. 145. 3. Bombay Gazetteer, Vol. I, Part 2, Page 234.

4. S.I.I., Vol. III, page 129.

5. மணலூரும் நங்கிலியும் குறிக்கப்பெற்ற கல்வெட்டுகளில் அளத்தி என்னும் ஊர் காணப் படவில்லை. மணலூரும் அளத்தியும் யாண்டுள்ளன என்பதுந் தெரியவில்லை.

6. (a) தளத்தோடும் பொரு தண்டெழப் பண்டொர்நாள்

அளத்தி பட்ட தறிந்திலை யையநீ

(க.பரணி, 11. தா. 74)

(b) வில்லது கோடா வேள்குலத்தரசர் அளத்தியிலிட்ட களிற்றின் தீட்டமும் (குலோத்துங்கன் மெய்க்கீர்த்தி)