உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 2

21

காக்கப்பெற்ற ஆயிரம் யானைகளைக் கவர்ந்து கொண்டான் என்று கலிங்கத்துப் பரணி உணர்த்துகின்றது'. இறுதியில் துங்கபத்திரைக் கரையில் நடைபெற்ற போரில். சளுக்கிய விக்கிரமாதித்தனும் அவன் தம்பி சயசிங்கனும் தோல்வியுற்று ஓடி ஒளிந்தனர். கங்க மண்டலமும் கொண்கானமும்; நம் குலோத்துங்கன் வசமாயின. ங்ஙனம் போரில் வாகைசூடிய இவ்வேந்தன் எண்ணிறந்த யானைகளையும் பொருட் குவியலையும் பெண்டிர்களையும் கைப்பற்றிக்கொண்டு தன் தலைநகராகிய கங்கைகொண்ட சோழபுரத்தை அடைந்தான். குலோத்துங்கனைச் சோழநாட்டினின்று துரத்துவதற்குச் சளுக்கிய விக்கிரமாதித்தன் ஐந்து ஆண்டுகளாகச் சேர்த்து வந்த பெரும்படை, தன் தமையன் சோமேசுவரனைத் தோற்றோடச் செய்து, குந்தள நாட்டில் அவன் ஆட்சிக்குட்பட்டிருந்த பகுதியைக் கவர்ந்துகொள்வ தற்குப் பயன்பட்டது எனலாம். ஆனால், அவன் குலோத்துங்கன் பால் தோல்வியெய்தித் தன் இராச்சியத்தின் ஒரு பகுதியை இழக்கும்படி நேர்ந்தமை குறிப்பிடத் தக்கதாம்.

இனி, அப்போர் நிகழ்ச்சிகள் குலோத்துங்கன் சோணாட்டில் பட்டம் பெற்றவுடன் நிகழ்ந்தன என்றும் அவற்றில் இவன் தோல்வியுற்றான் என்றும் பில்ஹணர் தம் விக்கிரமாங்கதேவ சரித்திரத்தில் கூறியிருப்பன உண்மைச் செய்திகள் ஆகா. குலோத்துங்கன் ஆட்சியின் ஏழாம் ஆண்டுக் கல்வெட்டுக்களில்".

1. தண்டநாயகர் காக்கு நவிலையிற்

கொண்டவா யிரங் குஞ்சரமல்லவோ

(க.பரணி 11-தா. 74)

நவிலை என்பது மைசூர் இராச்சியத்திலுள்ள நவிலைநாட்டின் தலைநகராகும்.

2. துங்க பத்திரைச் செங்க ளத்திடைச்

3.

சோழசேகரன் வாளெறிந்தபோர் வெங்கதக் களிற் றின்படத்தினால்

வெளியடங்கவே மிசை கவித்துமே

(Ep. Ind., Vol, IV, pp. 69 and 214)

(க.பரணி 4-தா. 7)

கல்வெட்டுகளில் இவன் கங்கமண்டலமும் சிங்கணமும் கைப்பற்றினான் என்று சொல்லப் பட்டுள்ளது. சிங்கணம் என்னும் நாடு முற்காலத்தில் எங்கிருந்தது என்பது புலப்படவில்லை. விக்கிரமாதித்தன் தம்பி சயசிங்கன், பிரதிநிதியாயிருந்து அரசாண்ட வனவாசிநாடே ஒருகால் அவ்வாறு குறிப்பிடப்பட்டிருத்தல் கூடும். விக்கிரமசோழன் உலாவில், குலோத்துங்கன் கொண்கானமும் கன்னடமும் கைக்கொண்டான் என்று கூறப் பட்டிருத்தலால் கொண்கானம் ஈண்டுக் குறிக்கப்பட்டது என்றுணர்க.

4. S.I.I., Vol. V, No. 1356.