உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




22

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் -4

7

இவன் விக்கிரமாதித்தனையும் சயசிங்கனையும் போரில் வென்ற செய்தி முதலில் குறிப்பிடப்பட்டிருத்தலால் அஃது இவன் ஆட்சியின் ஆறாம் ஆண்டாகிய கி. பி. 1076 இல் நடை பெற்றிருத்தல் வேண்டும் என்பது திண்ணம். அன்றியும், மேலைச் சளுக்கியர் கல்வெட்டுக்களிலும்' அந்நிகழ்ச்சி கி. பி. 1076 - க்கு நேரான சகம் 998 -ல் நிகழ்ந்தது என்று கூறப்பட்டிருத்தல் அறியத் தக்கது. எனவே, குலோத்துங்கன் சோணாட்டில் பட்டம் பெற்ற வுடன் அப்போர் நடைபெற்றதென்று பில்ஹணர் கூறியிருப்பது பொருந்தாதென்க. அப்போர் நிகழ்ச்சிக்குப் பின்னர், நம் குலோத்துங்கன் கல்வெட்டுக்கள் மைசூர் இராச்சியத்தில் பல

டங்களில் காணப்படுதலால், இவனே வெற்றி பெற்று அந்நிலப்பரப்பைக் கைப்பற்றிக்கொண்டான் என்பது இனிது புலனாகின்றது. ஆகவே குலோத்துங்கன் போரில் தோல்வியுற்று ஓடிவிட்டான் என்னும் பில்ஹணர் கூற்று கொள்ளத்தக்க தன்று' என்றுணர்க.

பாண்டியருடன் நடத்திய போர்

குலோத்துங்கன் வடபுலத்தில் மேலைச் சளுக்கியரோடு நிகழ்த்திய போர் வெற்றியுடன் முடிவெய்திய பின்னர் இவன் தென்புலத்தைத் தன்னடிப்படுத்தற்குக் கருதினான். ஆகவே, அக்காலத்தில் பாண்டிநாடு எத்தகைய நிலையில் இருந்தது என்பது நோக்கற்பாலதாம்.

முதற் பராந்தக சோழன், முதல் இராசராச சோழன் ஆகிய இருவேந்தர் ஆட்சிக் காலங்களில் பாண்டியர் தம் நிலை குலைந்து சோழச் சக்கரவர்த்திக்குத் திறை செலுத்தும் சிற்றரசராக வாழ்ந்து வந்தனர். ஆயினும், அவர்கள் சிறிது படைவலிமை எய்தியவுடன் அடிக்கடி சோழர்களோடு முரண்பட்டுத் தாம் முடி மன்னராய், சுயேச்சையுடன் வாழ்வதற்கு முயன்றுவந்தனர்.

1. Bombay Gazetteer, Vol. I. part II, page 217.

2. பில்ஹணர் என்னும் புலவர் தம்மை அன்புடன் ஆதரித்துப் பாராட்டிவந்த சளுக்கிய விக்கிரமாதித்தனைத் தம் நூலில் புனைந்துரை வகையில் புகழ்ந்திருத்தலால், அவர் கூறியவற்றுள் பிற ஆதாரங்களோடு ஒவ்வாதவற்றை ஏற்றுக் கொள்ளாமல் தள்ளிவிடுதலே நலம். அன்றியும், அப்புலவர் குலோத்துங்கனைத் தம் நூலில் இழித்துரைக்கும் இயல்பு உடையவராவர். ஆதலால், அவர் கூற்றை மெய்யென்று கொள்ள முடியவில்லை.