உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 2

23

அவர்கள் அவ்வாறு முரண்பட நேர்ந்தபோதெல்லாம் சோழ மன்னர்கள் தம் தம் ஆட்சிக்காலங்களில் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்துச் செல்லவேண்டியது இன்றியமையாத தாயிற்று. அதனால் நேரும் இன்னல்களை யுணர்ந்த கங்கை கொண்ட சோழன் என்று வழங்கப்பெறும் முதல் இராசேந்திர சோழன் தான் போரில் வென்ற பாண்டியரை அரியணை யினின்று இறக்கித் தன் புதல்வருள் ஒருவனுக்குச் சோழ பாண்டியன் என்னும் பட்டம் அளித்து அவன் பாண்டிநாட்டின் தலைநகராகிய மதுரையம்பதியில் அரசப் பிரதிநிதியா யிருந்துகொண்டு அந்நாட்டை ஆட்சிபுரியுமாறு ஏற்பாடு செய்தான். அங்ஙனமே அவன் மக்களுள் இருவரும் பேரன் மாரும் சோழபாண்டியர் என்னும் பட்டத்துடன் அம்மதுரை மாநகரிலிருந்து ஆட்சிபுரிந்தனர். வீரராசேந்திர சோழனுக்குப் பிறகு அவன் புதல்வன் அதிராசேந்திர சோழன் கி. பி. 1070 -ஆம் ஆண்டில் சில திங்கள் வரையில் அரசாண்டு நோய்வாய்ப்பட்டு இறந்தனன். அவ்வேந்தனுக்குப் புதல்வன் இல்லாமையால் சோணாடு, அரசனின்றி அல்லற்பட்டுப் பெருங்குழப்பத்திற் குள்ளாகும்படி நேர்ந்தது. அந்நாட்களில் பாண்டி நாட்டில் சோழ பாண்டியர் ஆட்சியும் ஒழிந்தது. சுயேச்சை பெற்றுத் தாமே முடி மன்னராதற்குக் காலங் கருதிக்கொண்டிருந்த பாண்டியரும், அதுவே தக்க சமய மென்றெண்ணி இழந்த நாட்டைக் கைப்பற்றி அதனை ஐந்து பகுதிகளாகப் பிரித்துக் கொண்டு ஐந்து அரசர்களாக இருந்து அவற்றை ஆட்சி புரியத் தொடங்கினர். அன்னோர் ஆட்சியும் கி. பி. 1081 வரை அமைதியாகவே நடைபெற்று வந்தது எனலாம்.

-

நம் குலோத்துங்கன் கி. பி. 1076 ல் மேலைச் சளுக்கியரைப் போரில் வென்ற பின்னர் ஐந்தாண்டுகள் வரை படைதிரட்டி, கி.பி. 1081 ஆம் ஆண்டில் தெற்கேயுள்ள பாண்டி

-

1. 'பஞ்சவர் ஐவரும்' என்று முதற் குலோத்துங்க சோழன் மெய்க்கீர்த்தியும் 'மீனவர் ஐவரும்' என்று கலிங்கத்துப்பரணியும் (க.பரணி. 11-தா. 70) கூறுகின்றமையால் அந்நாட்களில் பாண்டியர் ஐவர் பாண்டிநாட்டிலிருந்து ஆட்சி புரிந்தனர் என்பது பெறப்படுகின்றது. அன்னோர் உடன்பிறந்தோராக இருத்தல் வேண்டும். அன்றேல் தாயத்தினராக இருத்தல் வேண்டும்.