உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




24

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 4

நாட்டின்மேற் படையெடுத்துச் சென்றான்'. அதனையுணர்ந்த பாண்டியர் ஐவரும் ஒருங்கு சேர்ந்து பெரும் படையுடன் வந்து இவனை எதிர்த்துப் போர்புரிந்தனர். இப்போரில் பெருவீரனாகிய குலோத்துங்கனே வெற்றியடைந்தான். பாண்டியர் ஐவரும் புறங்காட்டி ஓடியொளிந்தனர். இங்ஙனம் இவ்வேந்தன்பால் தோல்வியுற்ற பாண்டியர் ஐவரும் யாவர் என்பது இப்போது புலப்படவில்லை. போரில் வாகை சூடிய குலோத்துங்கன் எல்லாத் திசைகளிலும் வெற்றித்தூண்கள் நிறுவியதோடு முத்துச் சலாபத்திற்குரிய பகுதிகளையும் பொதியிற் கூற்றத்தையும் சைய மலையையும் கன்னியாகுமரிப் பகுதியையும் கைப் பற்றினான்'. எனினும், தன் தாய்ப் பாட்டனாகிய கங்கை கொண்ட சோழனைப் போல் வென்ற நாடுகளைத் தன் பிரதிநிதி களைக் கொண்டு ஆட்சி புரிவதற்கு இவன் முயலவில்லை. எனவே, அவற்றையெல்லாம் உரிய வேந்தர்க்கே அளித்து ஆண்டு தோறும் தனக்குத் திறைப் பொருள் அனுப்பிவருமாறு இவன் ஏற்பாடு செய்தமை குறிப்பிடத்தக்க தாகும். இவன் கல்வெட்டுக் களும் இவன் வழியினர் கல்வெட்டுக்களும் பாண்டி நாட்டில் மிகுதியாகக் காணப்படாமைக்குக் காரணம் இதுவேயாம். சேரருடன் நடத்திய போர்

ஆம்

இதுவும் நம் குலோத்துங்கனது ஆட்சியின் 11 ஆண்டாகிய கி.பி. 1081-இல், பாண்டி நாட்டுப் போருக்குப் பின்னர் நடைபெற்றதாகும். பாண்டி நாட்டை ஆட்சிபுரிந்து குலோத்துங்கனது ஆட்சியின் 5, 6 - ஆம் ஆண்டு மெய்க்கீர்த்திகள் ‘தென்னவன் கருந்தலை பருந்தலைத்திடத்தன் - பொன்னகர்ப் புறத்திடைக் கிடப்ப' என்று கூறுகின்றன. இப்போரைப் பற்றிய செய்தி புலப்படவில்லை.

1.

-

2. (a) வடகடல் தென்கடல் படர்வது போலத் தன்பெருஞ் சேனையை யேவிப் பஞ்சவர் ஐவரும் பொருத போர்க்களத்தஞ்சி வெரிநளித் தோடி அரணெனப்புக்க காடறத்துடைத்து நாடடிப்படுத்து

(முதற் குலோத்துங்க சோழன் மெய்க்கீர்த்தி)

(b) விட்டதண்டெழ மீனவர் ஐவருங்

கெட்டகேட்டினைக் கேட்டிலை போலு நீ (க.பரணி 11-தா.70)

(c) சிதம்பரத்தில் வடமொழியில் வரையப்பெற்றுள்ள கல்வொட்டொன்று இவன் பாண்டியர் ஐவரையும் போரில் வென்ற செய்தியைக் கூறுகின்றது. (Ep. Ind. Vol. V. No. 13A) 3.S.I.I.,Vol. III, No. 69.