உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 2

25

வந்த சோழ மன்னர்களின் பிரதிநிதிகளே சேர நாட்டையும் அக்காலத்தில் ஆண்டு வந்தனர். நாட்டில் அதிராசேந்திரன் இறந்ததும் அரசனின்றிக் குழப்ப முண்டாகவே, அதுவே தக்க சமயமென்று கருதிப் பாண்டியரைப் போல் சேரரும் சுயேச்சை யெய்தித் தனியரசு புரியத் தொடங்கினர். அன்னோர் ஆட்சியும் கி.பி. 1081 வரையில் அங்கு நடைபெற்றது. பாண்டியர்களை வென்று கப்பஞ் செலுத்தி வருமாறு செய்த குலோத்துங்கன், உடனே சேரரையும் வென்று அத்தகைய நிலைக்குக் கொண்டு வர எண்ணி, அவர்கள் நாட்டின்மீது படையெடுத்துச் சென்றான். திருவனந்தபுரத்திற்குத் தெற்கே பத்து மைலில் மேலைக் கடற் கோடியிலுள்ள விழிஞத்திலும்' திருவனந்தபுரத்தைச் சார்ந்த காந்தளூர்ச் சாலையிலும் குமரி முனைக்கு வடக்கே பத்து மைலிலுள்ள கோட்டாறு' என்ற ஊரிலும் பெரும் போர்கள் நடை பெற்றன. சிறிதும் அஞ்சாமல் எதிர்த்துப் போர்புரிந்த மலைநாட்டு வீரருள் பலர் போர்க்களத்தில் உயிர் துறந்தனர். குலோத்துங்கன் காந்தளூர்ச் சாலையிலுள்ள சேரமன்னனது கப்பற்படையினை இருமுறையிழித்துப் பெருமை எய்தினான்'. கோட்டாறும் எரி காளுத்தப்பெற்று அழிக்கப்பட்டது. சேரமன்னன் தோல்வி யுற்றுக் குலோத்துங்கனுக்குக் கீழ் ஒரு சிற்றரசனாகி ஆண்டுதோறும் திறை செலுத்தி வர ஒப்புக்கொண்டான். சேரரும் பாண்டியரும் தம் படைவலியைப் பெருக்கிக்கொண்டு தன்னுடன் முரண்பட்டுத் தீங்கிழைக்காதவாறு குலோதுங்கன் அன்னோர் நாடுகளில் கோட்டாறு முதலான இடங்களில் சிறந்த தலைவர்களின் கீழ் நிலைப்படைகள் நிறுவினான். அங்ஙனம் கோட்டாற்றில் அமைக்கப் பெற்ற சோழநாட்டுப் படைக்குக் கோட்டாற்று நிலைப்படை4 என்னும் பெயர் வழங்கலாயிற்று.

1. வேலைகொண்டு விழிஞ மழித்ததுஞ்

2.

சாலை கொண்டதுந் தண்டு கொண்டேயன்றோ

மேவலர்தஞ்

சேலைத் துரந்து சிலையைத் தடிந்திருகாற்

சாலைக் கலமறுத்த தண்டினான்-

(க.பரணி. 11 - தா. 72)

வெள்ளாறுங் கோட்டாறும் புகையான்மூட

(விக்கிரம சோழனுலா வரிகள் 46-48) (க.பரணி. 3 - தா. 21)

3. Ep. Ind., Vol. V, No. 13A.

4. கோட்டாற்று நிலைப்படை தரணிவிச்சாதிரத்தறும்பில் படையிலான தமிழன் மாணிக்கன்

வசம் விட்ட சாவாமூவாப் பேராடு -

(Travancore Archaeological Series, Vol. I, Page 247)